திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த வருடம் இந்திய சினிமாவை புரட்டிப் போட உள்ள 6 தமிழ் படங்கள்.. பாலிவுட்டுக்கு பயத்தை காட்டும் லியோ

இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் வருடத்திற்கு ஒருமுறை அல்லது எப்போதாவது ஒரு பிரம்மாண்ட படங்கள் வெளிவரும். அது ஒட்டு மொத்த இந்திய சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்து விடும். அப்படி வந்த படம் தான் பொன்னியின் செல்வன் கூட. ஆனால் இந்த வருடம் இந்திய சினிமா உலகிற்கு பயத்தை காட்டும் வகையில் அடுத்தடுத்த ரிலீசுக்காக ஆறு பிரம்மாண்ட படங்கள் காத்திருக்கின்றன.

கங்குவா: நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வழக்கம் போல சிவாவின் கதையாக இல்லாமல் இது முற்றிலும் வித்தியாசமான கதை களத்துடன் உருவாகி இருக்கிறது. இரு வேறு காலகட்டங்களில் நடக்கும் வரலாற்று கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. பான் இந்தியா மூவியாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

இந்தியன் 2: ஏற்கனவே உலகநாயகன் கமலஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஷங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. தாய்லாந்து, தைவான் என பல நாடுகளிலும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 80 சதவீத வேலைகள் முடிவடைந்து இருக்கின்றன.

Also Read:300 பேரை அழைத்து பாராட்டிய தளபதி.. அரசியல் ஆட்டம் ஆரம்பம், 2026ல் தட்டித் தூக்க பலே திட்டம்

ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் என்றாலே எப்போதுமே ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் இந்த படம் மல்டி ஸ்டார்ஸ்களை கொண்டு வேறு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த படத்தில் இணைந்திருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது.

கேப்டன் மில்லர்: இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்த படமும் வரலாற்று பின்னணியை மையமாகக் கொண்டுதான் எடுக்கப்பட்டு வருகிறது. தனுஷின் ஹாலிவுட் விசிட்டிற்கு பிறகு வெளியாகவிருக்கும் படம் என்பதால் இதன் மீது அதிக எதிர்பார்த்து இருக்கிறது.

Also Read:தளபதியிடம் கெஞ்சி கேட்ட மாஸ்டர் மகேந்திரன்.. ரசிகனுக்காக செவி சாய்ப்பாரா விஜய்?

ஏகே 62: நடிகர் அஜித்குமார் அடுத்து நடிக்கவிருக்கும் அவருடைய 62 ஆவது படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. இதற்கு காரணம் அவருடைய முந்தைய படமான துணிவின் வெற்றி தான். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கப் போவதாக உறுதியாகி இருக்கிறது. அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணி என்பதால் படத்தின் எதிர்பார்ப்பு இப்பவே சூடு பிடித்திருக்கிறது.

லியோ: ஒட்டுமொத்த சினிமா உலகமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் தான். பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் அந்த ஹீரோக்களின் மீதான பில்டப் அதிகமாக இருக்கும். ஆனால் லியோ படத்திற்கு ஒரு பக்கம் விஜய், மற்றொரு பக்கம் சென்சேஷனல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என பயங்கர பில்டப்புடன் இந்த படம் எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது.

Also Read:மார்க் ஆண்டனி டீசர் எல்லாம் ஒரு மேட்டரே இல்லையாம்.. விஷால் விஜய்யுடன் திடீரென்று ஒட்டிக்கொண்ட காரணம் இதுதான்

Trending News