Top 6 Tamil Actors: ஒரு கலைஞருக்கு மகிழ்ச்சியை தருவது அவார்டு தான். அதுவும் 150 படங்களுக்கு மேல் நடித்தும் 6 டாப் நடிகர்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால் அவர்களை விட இளம் வயதினர் அந்த விருதை தட்டி செல்வதுதான் அவர்களுக்கெல்லாம் வயித்தெரிச்சலாக இருக்கிறது. திறமை இருந்தும் இன்னும் தேசிய விருது வாங்காமல் இருக்கும் அந்த 6 ஹீரோஸ்களை பற்றி பார்ப்போம்.
சிவாஜி: நடிப்புச் சக்கரவர்த்தியான நடிகர் சிவாஜி கணேசன் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 288 படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் ஹீரோவாக மட்டும் 250 படங்களில் நடித்த ஒரே நடிகரும் சிவாஜி தான். இவருடைய தனித்துவமான குரல் வளமும், தெளிவான உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பும் இப்போது இருக்கும் இளம் நடிகர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதா சாகிப் பால்கே விருது, செவாலியர் போன்ற விருதுகள் எல்லாம் கிடைத்தும் இன்னும் தேசிய விருது மட்டும் கிடைக்காமல் போனது அவருக்கு இருந்த ஒரு சின்ன வருத்தம்.
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் ரஜினி, தன்னுடைய 47 வருட சினிமா பயணத்தில் தற்போது வரை 169 படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சூப்பர் ஸ்டாருக்கு இதுவரை பத்மபூஷன், பத்ம விபூஷன், தாதா சாகிப் பால்கே போன்ற உயரிய விருதுகள் கிடைத்தும் இன்றுவரை அவருக்கு தேசிய விருது மட்டும் கிடைக்காமல் இருக்கிறது.
Also Read: அஜித்தின் விடாமுயற்சி புதிய கெட்டப் இணையத்தில் வைரல்.. கொல மாஸாக இருக்கும் AK, ரஜினி
அர்ஜுன்: தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் பெரும்பாலும் சண்டைக் காட்சியில் நடித்து மிரட்டி விட்டவர் தான் ஆக்சன் கிங் அர்ஜுன். 90களில் டாப் நடிகராக தரமான படங்களைக் கொடுத்து இருந்தாலும் இன்னும் இவருக்கு தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை.
சத்யராஜ்: கோயமுத்தூர் பாஷையில் 80 மற்றும் 90களில் நடிகராகவும் வில்லனாகவும் நடித்து கலக்கியவர் தான் சத்யராஜ். நக்கல் நையாண்டி நிறைந்த இவருடைய பேச்சைக் கேட்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இருப்பினும் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கும் சத்யராஜுக்கு இன்னும் ஒரு தேசிய விருது கூட கிடைக்கல.
பிரபு: சிவாஜியின் மகனாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் பிரபுவுக்கு என்று தனி ரசிகர் கூட்டமும் இருந்தது. சிவாஜி அளவிற்கு சினிமாவில் உச்சம் பெறாவிட்டாலும் நல்ல கதையம் கொண்ட படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பு திறமையை வெளிக்காட்டினார். இவருக்கும் இதுவரை தேசிய விருது கிடைக்கவில்லை. அப்பாவுக்கே கிடைக்கல மகனுக்கு மட்டும் எப்படி கிடைச்சிடும்.
சரத்குமார்: ரசிகர்களால் சுப்ரீம் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்ட சரத்குமார், 90களில் வில்லனாக என்ட்ரி கொடுத்து அதன் பின்பு தான் ஹீரோவாக நடித்தார். தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கும் சரத்குமார் இப்போதும் குணச்சித்திர கேரக்டரில் டாப் நடிகர்களின் படங்களில் நடித்த வருகிறார். இன்று வரை இவருக்கும் ஒரு தேசிய விருது கூட கிடைத்த பாடில்லை.