புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூரியவம்சம் ரிலீஸ் ஆகி 27 வருஷமாச்சு! ஆனா இப்ப வரை டிரெண்டில் இருக்கும் அந்த 6 வசனங்கள்

27 years of Suryavamsam: 90ஸ் கிட்ஸ்களின் ஆல் டைம் பேவரைட் படமாக இருப்பது சூரிய வம்சம். சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன் ஆகியோர் நடித்த இந்த படம் ரிலீஸ் ஆகி இன்றோடு 27 வருடங்கள் ஆகிறது. என்னதான் படம் வந்து 27 வருஷம் ஆகிவிட்டாலும் இந்த படத்தின் முக்கியமான சில வசனங்கள் இன்று வரை டிரெண்டில் இருக்கின்றன அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

பாயாசம் சாப்புடுங்க ப்ரெண்ட்: இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு சரத்குமாரின் பேரன் அவருக்கு பாயாசம் கொடுத்து, பாயாசம் சாப்பிடுங்க ஃபிரண்ட் என சொல்லி இருப்பார். அதன் பின்னர் அந்த பாயாசத்தில் ஆனந்தராஜ் விஷம் கலந்து விடுவார். இதனாலேயே ஜாலியாக பேசும்போது கூட நண்பர்களுக்குள் இவனுக்கு ஒரு பாயாசத்தை போட்டுட வேண்டி தான் என இன்று வரை கிண்டலாக பேசுவது உண்டு. நிறைய மீம்ஸுகளிலும் இந்த வசனம் பேசப்படுகிறது.

சின்ராச கையிலேயே புடிக்க முடியாது: சனி, ஞாயிறு விடுமுறைகளில் மாமா பொண்ணு ஊருக்கு வந்தா சின்ராசை கையிலே பிடிக்க முடியாது என மணிவண்ணன் சொல்லி இருப்பார். இந்த வசனமும் நிறைய மீம்ஸ்களில் பல வருடங்களாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

படிச்ச நா எங்க, படிக்காத நீ எங்க: பிரியா ராமன், சரத்குமாரிடம் படித்த நான் எங்க, படிக்காத நீ எங்கே என்று கேட்டிருப்பார். இந்த வசனம் பாய்ஸ் vs கேர்ள்ஸ், 90 கிட்ஸ் vs 2கே கிட்ஸ் போன்ற மீம்ஸுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

என்ற குடும்பத்தில் எல்லாரும் வந்தாச்சு சீக்கிரம் போட்டோ எடு: இந்த வசனம் சமீப காலமாகவே அதிகமான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குரூப் போட்டோ எடுக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாராவது ஒருவரை கலாய்ப்பதற்காக இந்த வசனத்தை பயன்படுத்துகிறார்கள்.

காலம் எவ்வளவு வேகமாக சுத்துது பாத்தீங்களா: சரத்குமாரை நிராகரிக்கும் பிரியா ராமன் அவரிடமே உதவி கேட்டு வரும்போது தேவயானி இந்த வசனத்தை பேசியிருப்பார். சரியான நேரத்தில் உணர்ச்சிபூர்வமாக பேசப்பட்ட இந்த வசனம் தற்போது நிறைய காமெடி மீம்ஸ்களில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

நல்லா இருந்துச்சா யானை சவாரி: சரத்குமார் தன்னுடைய பேரனை யானை மீது இருந்து கீழ் இறக்கி நல்லா இருந்துச்சா யானை சவாரி என்று கேட்பார். பொதுவாக யாரிடமாவது அதிகமாக உருட்டிவிட்டு அல்லது ஏதாவது ஒன்று செய்கிறேன் என்று அதிக எதிர்பார்ப்பை ஏத்தி விட்டு அவர்களை கலாய்ப்பதற்காக இந்த வசனத்தை சொல்வது உண்டு. மீம்ஸ்களிலும் இது டிரெண்டாக இருக்கிறது.

Trending News