சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மறக்க முடியாத 6 ஃபேமிலி என்ட்ரிகள்.. ஒரே அறையில் ஃபேமஸான பிரதீப்

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரவுண்டு பேமிலி ரவுண்டு தான். போட்டியாளர்களின் குடும்பங்கள் கிட்டத்தட்ட 70 நாட்களுக்குப் பிறகு அவர்களை நேரில் பார்க்க வருவது ரொம்ப உணர்ச்சிகரமாக இருக்கும். இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் மறக்க முடியாத ஆறு ஃபேமிலி எண்ட்ரிகளை பற்றி பார்க்கலாம்.

பரபரப்பான 6 பேமிலி எண்ட்ரிகள்

கவின்: சீசன் 3யில் கவினுக்கு அவருடைய குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை. அவருடைய நண்பர் மற்றும் நடிகர் பிரதீப் ஆண்டனி தான் உள்ளே வந்தார். கடைசியாக அவர் கிளம்பும் பொழுது உன்னை நம்பியவர்களை ஏமாற்றியதற்காக என்று சொல்லி கவினை ஓங்கி ஒரு அறை அறைவார். இதுவரை நடந்த பேமிலி ரவுண்டுகளில் இதுதான் அவ்வளவு சீக்கிரம் பார்வையாளர்களால் மறக்க முடியாத ஒன்று. அந்த ஒரு அறை தான் பிரதீப்பை சீசன் 7 கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

ஐஸ்வர்யா துத்தா: சீசன் 2 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு சென்றதில் பெரிய பங்கு ஐஸ்வர்யா துத்தாவுக்கு இருக்கிறது. இதில் ராணி மகாராணி என்னும் டாஸ்க்கில் ஐஸ்வர்யா, தாடி பாலாஜி மீது குப்பையை வீசி இருப்பார். இது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது. பேமிலி ரவுண்டில் வீட்டிற்குள் வந்த ஐஸ்வர்யாவின் அம்மா தாடி பாலாஜியிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டது மனதை உருக்கும் அளவுக்கு இருந்தது.

Also Read:அடுத்த 4 வாரம் பிக்பாஸில் இதுதான் சம்பவம்.. அதிக பணத்தை வெல்லும் போட்டியாளர் இவர் தான்

லாஸ்லியா: சீசன் 3 போட்டியாளர் லாஸ்லியா அவருடைய அப்பா மரியநேசனை பற்றி நிறைய பேசியிருந்தார். குடும்பத்திற்காக அவர் கனடாவில் வேலை பார்ப்பதும் இத்தனை வருடங்களின் ஒரு முறை கூட வீட்டிற்கு வந்து பார்க்கவில்லை என்றும் சொல்லி இருந்தா.ர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக அவருடைய அப்பா வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால் அவர் உள்ளே வந்ததும் லாஸ்லியாவை கோபத்தில் திட்டியது பெரிய அதிர்ச்சி சம்பவமாக இருந்தது.

ஷிவானி நாராயணன்: நடிகை ஷிவானி நாராயணன் தான் வீட்டிற்கு ஒரே பெண் என்றும், ரொம்பவும் செல்லமாக வளர்க்கப்பட்டதாகவும் சொல்லி இருந்தார். அந்த சீசனில் அவர் பாலாவை காதலித்து வந்ததாக கூட சொல்லப்பட்டது. அதை மனதில் வைத்துக் கொண்டு பேமிலி ரவுண்டில் உள்ளே வந்த அவருடைய அம்மா, ஷிவானியை ரொம்பவும் மோசமாக திட்டி இருந்தார்.

அமீர்: அமீர் தனக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்றும், அஷ்ரப் என்பவரின் குடும்பம் தான் தன்னை எடுத்து வளர்த்ததாகவும் சொல்லி இருந்தார். பேமிலி ரவுண்டில் சைஜி, ஐஷு, அலினா அட்டகாசமான நடனத்துடன் உள்ளே வந்தது பிக் பாஸ் வீட்டை ரணகளம் ஆக்கியது. இதற்குப் பிறகுதான் ஐஷு சீசன் 7க்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிவின்: சீசன் 6 நிகழ்ச்சியில் சிவின் என்பவர் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டார். இவருக்கு அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட கதிர் மீது ஒருதலை காதல் இருந்தது. கதிரும் அவரிடம் நட்பாக பழகினார். ஃபேமிலி ரவுண்டில் கதிரின் காதலி வீட்டிற்குள் வந்தவுடன், அவர் முன்னிலையில் சிரித்துப் பேசி விட்டு, தனியாக வந்து சிவின் அழுதது பார்ப்பதற்கு கஷ்டமான சம்பவமாக இருந்தது.

Also Read:பிக் பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு கமல் மேல் அப்படி என்னதான் காண்டு?. மனப்பாடம் பண்ணி மாட்டிக்கொண்ட ஆண்டவர்

Trending News