வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பாரதிராஜாவின் 6 மறக்க முடியாத படங்கள்.. சப்பானியே ஒரே டயலாக்கில் தூக்கி சாப்பிட்ட பரட்டை

Director Bharathiraja: இயக்குனர் இமயம் என்ற சிகரத்தை தொட்டு திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், நடிகராக பன்முக திறமையை வெளிப்படுத்தியவர் பாரதிராஜா. இவர் முக்கால்வாசி உணர்ச்சிப்பூர்வமான கிராமத்து மண்வாசனை கூடிய படங்களை எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தக்கூடியவர். அப்படிப்பட்ட இவர் இயக்கத்தில் மறக்க முடியாத சில படங்களை பற்றி பார்க்கலாம்.

சிவப்பு ரோஜாக்கள்: பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி, பாக்கியராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது கமலஹாசன் சிறுவயதில் இருக்கும் பொழுது இவரை சுற்றி இருக்கும் பெண்களின் நடத்தையால் இவருடைய மன உளைச்சலின் காரணமாக மனநோயாளியாக வளருவார். அதன் பின் பெண்களிடம் தவறான முறையில் ஈடுபட்டு அவர்களைக் கொள்ளும் சைக்கோவாக இப்படம் அமைந்திருக்கும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று 175 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருக்கிறது.

Also read: 50 வயதில் மீண்டும் ஹீரோயினான 80ஸ் நடிகை.. பாரதிராஜா கதாநாயகினா சும்மாவா!

அலைகள் ஓய்வதில்லை: பாரதிராஜா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்திக், ராதா, தியாகராஜன், சில்க் ஸ்மிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது இந்து பையன், ஒரு கிறிஸ்துவ பெண்ணை காதலித்ததால் இவர்கள் இருவரும் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லும் விதமாக இப்படம் அமைந்திருக்கும். இப்படம் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

முதல் மரியாதை: பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு முதல் மரியாதை திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை காணாத ஒருவர் விரக்தியில் இருக்கும் பொழுது, அவர் சந்திக்கும் ஒரு இளம் வயது பெண்ணுக்கும் இவருக்கும் இடையில் இருக்கும் உறவை சொல்லும் விதமாக கதை அமைந்திருக்கும். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா வெற்றி பெற்றது. அத்துடன் சிறந்த தமிழ் திரைப்பட விருதை பாரதிராஜாவுக்கு இப்படம் வாங்கி கொடுத்தது.

Also read: தரித்திரம் புடிச்சவன் என ஒதுக்கப்பட்ட இயக்குனர்.. கடைசியில் பாரதிராஜா கடனை தீர்த்ததே அவர்தான்

கடலோர கவிதைகள்: பாரதிராஜா இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு கடலோரக் கவிதைகள் திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், ரேகா, ராஜா மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது வெகுலியாக இருக்கும் சத்யராஜுக்கும், அறிவின் ஞானமாக இருந்து ஆசிரியராக பணிபுரியும் ரேகாவிற்கும் இடையில் ஏற்பட்ட காதலை சொல்லும் விதமாக அமைந்திருக்கும். இப்படம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 25வது படமாகும்.

தாஜ்மஹால்: பாரதிராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு தாஜ்மஹால் திரைப்படம் வெளிவந்தது. இதில் இவருடைய மகனாக மனோஜ், ரியா சென், ரேவதி, ராதிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது இரண்டு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலித்ததால், இவர்களின் குடும்பத்திற்குள் சிக்கித் தவிக்கும் பிரச்சினையை சொல்லும் விதமாக படம் அமைந்திருக்கும். இப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மனதிற்கு ரொம்பவே இதமான வரிகளுடன் இருக்கும்.

16 வயதினிலே: பாரதிராஜா இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது 16 வயது பள்ளி மாணவியாக இருக்கும் மயில்(ஸ்ரீதேவி) இவரின் சிறு வயதில் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதமாக கதை அமைந்திருக்கும். அத்துடன் இப்படத்தில் கமலின் சப்பாணி கதாபாத்திரம் மற்றும் ரஜினியின் பரட்டை கதாபாத்திரத்தை இப்போது வரை யாராலும் மறக்க முடியாது. ரஜினி மற்றும் கமல் இவர்களுடைய கேரியருக்கு இந்த கதாபாத்திரம் மிகவும் பக்கபலமாக இருந்தது என்றே சொல்லலாம். ஆனால் விழுந்து விழுந்து நடித்த சப்பானி கேரக்டரை, “இது எப்படி இருக்கு” என்று ஸ்டைலாக சொல்லி அத்தனை பேரையும் கைதட்ட வைத்தவர் பரட்டை கதாபாத்திரம்.

Also read: பாரதிராஜாவிடம் திமிர்த்தனமாய் கேட்ட வாய்ப்பு.. பெரிய பெரிய யானைகளை கவத்திய கர்வம்

- Advertisement -spot_img

Trending News