திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தர லோக்கலான கதாபாத்திரத்திற்கு பெயர் போன 6 வில்லன்கள்.. தனுசுக்கே தண்ணி காட்டிய விநாயகன்

6 Villains: சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கே குடைச்சல் கொடுத்த வில்லன் தான் விநாயகன். இந்நிலையில் இவரின் அடாவடியான கதாபாத்திரம் மக்களிடையே பெயர் பெற்றது. இவரைப் போன்று தர லோக்கல் ஆன கதாபாத்திரத்திற்கு பெயர் போன 6 வில்லன்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

தீனா: ஸ்டண்ட் நடிகராகவும், வில்லனாகவும் சாய் தீனா தன் எதார்த்தமான நடிப்பினை மேற்கொண்ட படங்கள் ஏராளம். அவ்வாறு இருக்க, 2016ல் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் இவரின் லோக்கல் கதாபாத்திரம் ஹீரோவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்திருக்கும்.

Also Read: லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டும் பிக் பாஸ் ஜோடி.. எல்லாமே விஜய் அப்பா SAC போட்ட விதை

டேனியல் பாலாஜி: வில்லனாக இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் மக்களிடையே அதிர வைக்கும் அளவிற்கு சிறப்பாய் அமைந்திருக்கும். அதிலும் பொல்லாதவன் படத்தில் கடைசி வரை தனுஷ் உடன் விம்பிற்கு நிற்கும் இவரின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

கிஷோர் குமார்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் இவர் மேற்கொண்ட நடிப்பு நல்ல விமர்சனங்களை பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக 2007ல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் படத்தில் செல்வம் கதாபாத்திரத்தில் லோக்கல் தாதாவாய் தெறிக்க விட்டிருப்பார்.

Also Read: 60 வயசானாலும் 35 வயது போல் இளமையுடன் ஜொலிக்கும் 5 ஹீரோக்கள்.. காலேஜ் ஸ்டுடென்ட் போல உலா வரும் உலக நாயகன்

பாலா சிங்: படங்களில் இவரின் வில்லத்தனம், காண்போருக்கே வெறுப்பை கொடுக்கும் விதமாய் அமைந்திருக்கும். அவ்வாறு புதுப்பேட்டை படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார் அவை படத்தில் திருப்புமுனையாய் அமைந்திருக்கும்.

அமீர்: இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், ஆக்டராகவும் அமீர் எண்ணற்ற படங்களை மேற்கொண்டு இருந்தாலும், வடசென்னை படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மீனவ மக்களின் நன்மைக்கு போராடும் ராஜன் கதாபாத்திரத்தில் தன் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் குறிப்பாக இவரின் லோக்கல் பாடி லாங்குவேஜ் படத்திற்கு கூடுதல் சிறப்பாய் அமைந்திருக்கும்.

Also Read: சச்சின், கங்குலி, ஆசாருக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய ஆல்ரவுண்டர் மரணம்.. அதிர்ச்சியில் மொத்த கிரிக்கெட் வீரர்கள்!

விநாயகன்: பன்முகத் திறமை கொண்ட இவர் மலையாளத்திலும், தமிழிலும் மேற்கொண்ட கதாபாத்திரம் பெரிதளவு பேசப்படாத நிலையில், தற்பொழுது ஜெயிலர் படத்தில் வில்லனாய் தெறிக்க விட்டிருப்பார். இருப்பினும் மரியான் படத்தில் இவர் மேற்கொண்ட லோக்கல் கதாபாத்திரம் தனுஷிற்கு தண்ணி காட்டும் விதமாய் அமைந்திருக்கும்.

Trending News