வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பத்து படங்களுக்கு மேல் பண்ணியாச்சு ஒரு ஹிட் கூட இல்ல.. வருத்தப்பட்டே வாழ்க்கையை ஓட்டும் 6 இளம் நடிகர்கள்

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் பல படங்கள் தொடர்ச்சியாக நடித்தாலும், படங்கள் ஓடாத காரணத்தால் அவர்களது மார்க்கெட்டே கேள்விக் குறியாகியுள்ளது. அப்படிப்பட்ட நடிகர்கள் தொடர் படங்கள் நடித்தும் ஹிட் எப்போதான் கொடுப்போம் என்ற வருத்தத்திலேயே வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட 6 நடிகர்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

அதர்வா: பானா காத்தாடி படம் மூலமாக தமிழில் ஹீரோவாக அறிமுகமான அதர்வா, மறைந்த நடிகர் முரளியின் மகனாவார். தனது தந்தையின் மறைவுக்கு பின் அவரது பெயரை காப்பாற்ற பல படங்களில் நடித்து வரும் அதர்வா, பரதேசி, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பு திறமையை நிரூபித்த படங்களாகும். கமர்ஷியல் படங்களை மட்டுமே தேர்ந்துடுத்து நடித்து வரும் அதர்வா, இப்போது வரை பெயர் சொல்லும் அளவுக்கு படங்கள் பண்ணாமல் உள்ளார்.

Also Read: தூங்கு மூஞ்சி அஸ்வினை மிஞ்சும் ஹரிஷ் கல்யாண்.. சிரிப்பாய் சிரிக்கும் கோடம்பாக்கம்

ஹரிஷ் கல்யாண்: மலையாளத்தில் சர்ச்சைக்குரிய படமாக வெளியான சிந்து சமவெளி படம் மூலமாக அறிமுகமான ஹரிஷ் கல்யாண், தமிழில் பொறியாளன், பியார் பிரேமா காதல், ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட தொடர் படங்களில் நடித்தார். பெண் ரசிகைகள் இவருக்கு இருந்தும் தற்போது வரை பெயர் சொல்லும் வகையிலான படங்கள் இவருக்கு கிடைக்கவில்லை. தற்போது கிரிக்கெட் வீரர் தோனியின் தோனி என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலமாக புதுப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஜெய்: நடிகர் விஜயின் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக அறிமுகமான ஜெய் ,தொடர்ந்து வெங்கட் பிரபுவின் சென்னை 600028 படத்தில் நடித்தார். மேலும் சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த ஜெய், ஹீரோக்கான அனைத்து தகுதிகளும் இருந்தும் இவரது பெயர் சொல்லும் அளவிற்கு படங்கள் இல்லாமல் உள்ளார். தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

Also Read: திறமை இருந்தும் புகழ் பெறாத 5 நடிகர்கள்.. இப்போது வரை போராடி வரும் அதர்வா

சாந்தனு: இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜின் மகனாக சாந்தனு சக்கரக்கட்டி படத்தின் மூலமாக அறிமுகமானார். சாக்லேட் பாயாக வலம் வந்த சாந்தனு நடித்த பல படங்கள் தோல்வியுற்ற நிலையில், விஜயின் மாஸ்டர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். இன்றுவரை இவரின் பெயர் சொல்லும் அளவில் ஒரு படம் கூட நடிக்காமல் உள்ளார்.

கெளதம் காரத்திக் : நடிகர் கார்த்திக்கின் மகனான இவர் மணிரத்னம் இயங்கிய கடல் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ரங்கூன், என்னமோ எதோ, வை ராஜ வை, தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், தற்போது வரை பெரிய வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். மேலும் நடிகை மஞ்சிமா மோகனை அண்மையில் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

துருவ் விக்ரம்: நடிகர் சியான் விக்ரமின் மகனான இவர்,ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலமாக தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து விக்ரமின் மகான் படத்திலும் நடித்த இவர் பெரிய அளவிலான படங்களில் நடிக்க காத்துக்கொண்டிருக்கிறார். விக்ரமின் சாதனையை முறியடிக்கும் அளவிற்கு இவருக்கு திறமை உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read:ஹீரோவாக்க உசுர கொடுத்து வேல செஞ்ச 5 அப்பாக்கள்.. மகனுக்காக குருவையே எதிர்த்த விக்ரம்

Trending News