எப்படியாவது ரஜினி படத்தில் நடித்து விட வேண்டும் என்று தனுஷ், சிவகார்த்திகேயன் என பல இளம் ஹீரோக்கள் போட்டி போட்டு சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது, வந்த வாய்ப்பை இமேஜ் கெட்டுவிடும் என்று வேண்டாம் என மறுத்துள்ளார் தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் ஒருவர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து கூலி என்ற ஒரு படத்தை இயக்குகிறார். ஏற்கனவே இந்த படத்திற்கான டைட்டில் ப்ரோமோ வெளிவந்து சக்கை போடு போட்டது. ரஜினியை தவிர இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், மகேந்திரன் போன்றவர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
கேங்ஸ்டர் மற்றும் கடத்தல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கதை பான் இந்தியா படமாக உருவாகிறது. இப்பொழுது இந்த படத்திற்கான வில்லன் கதாபாத்திரத்திற்காக ஆர்ட்டிஸ்ட் தேடும் வேலையில் இறங்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்படி அவர் தேர்ந்தெடுத்தவர் தெலுங்கு மாஸ் நடிகர் நாகார்ஜூன்.
இமேஜை கெடுக்க விரும்பாத 60 வயசு சாக்லேட் பாய்
தெலுங்கு உலகில் 60 வயதாகியும் இன்னும் மகேஷ்பாபுவின் சாக்லேட் ஹீரோ அந்தஸ்திற்கு டப் கொடுத்து வருகிறார் நாகர்ஜூன். இவர் ரஜினிக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ஆனால் வில்லன் கதாபாத்திரம் என்றதுமே பின்வாங்கி விட்டாராம் நாகர்ஜூன்.
தெலுங்கு உலகில் மகேஷ் பாபு படத்திற்கு பிறகு மக்கள் அங்கே விரும்புவது பவன் கல்யாண் மற்றும் நாகர்ஜுனாவை தான். இவர்கள் மூவரின் படத்திற்கும் அங்கே மாஸ் ஓபனிங் உண்டு. இப்பொழுது நாகார்ஜூன், ரஜினிக்கு வில்லனாக நடித்தால் ஒட்டுமொத்த இமேஜும் போய்விடும். அதனால் ஜகா வாங்கி விட்டார் இந்த 60 வயது சாக்லேட் பாய்.
- டில்லியை வைத்து ஆட்டம் காட்ட போகும் லோகேஷ்
- கூலி படத்தில் ரஜினி, லோகேஷின் சம்பளம்
- ரஜினிக்கு வயசானதால் சிக்கலில் மாட்டிய லோகேஷ்