புதன்கிழமை, ஜனவரி 15, 2025

60% மக்கள் 300 காசு இல்லாம இருக்காங்க.. ஆனந்த் அம்பானி கல்யாணத்திற்கு 5000 கோடி செலவு, மொத்த லிஸ்ட்

Anand Ambani Wedding: உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு முகேஷ் அம்பானி அவருடைய கடைசி பையனாக இருக்கும் ஆனந்த் அம்பானிக்கு மிக பிரம்மாண்டமாக ஜூலை 12ஆம் தேதி கல்யாணத்தை பண்ணி வைத்திருக்கிறார். இந்திய வர்த்தகத்திலேயே பில்லியன் கணக்கான பணத்தை வைத்து எப்படி செலவழிக்க வேண்டும் என்று தெரியாத அளவிற்கு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்டவர் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் எப்படி இருக்கும் உலகத்தையே மிரள வைக்க வேண்டும். அதற்காக ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்க்கும் சுமார் 5000 கோடி செலவு செய்து கல்யாணத்தை செய்து வைத்திருக்கிறார். மும்பையில் இவர்களுக்கு சொந்தமான ஜியோ வேர்ல்ட் கான்வர்சேசன் சென்டரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருக்கிறது.

5000 கோடி செலவில் நடந்த கல்யாணம்

இந்த திருமணத்திற்கு பல முக்கிய பிரபலங்கள் மற்றும் டாப் செலிப்ரிட்டீஸ்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என குதூகலமாக நடந்திருக்கிறது. அதிலும் ஒட்டுமொத்த பாலிவுட் திரை உலகமே அங்க தான் இருந்தது என்று சொல்வதற்கு ஏற்ப அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். கோலிவுட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் குடும்பத்துடன் போயிருக்கிறார். இவர்களை தொடர்ந்து சூர்யா ஜோதிகா, அட்லி பிரியா, நயன் விக்கி போன்ற பலரும் கலந்து கொண்டார்கள்.

அத்துடன் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், கோடியில் புரளும் பணக்காரர்கள் அனைவருமே கல்யாணத்திற்கு போயிருக்கிறார்கள். போன அனைவருக்கும் அம்பானி கோடிக்கணக்கு மதிப்புள்ள பரிசுகளையும் வழங்கி இருக்கிறார். அதில் ஷாருக்கான் மற்றும் ரன்வீர் சிங் போன்ற பல பிரபலங்களுக்கு சுமார் 2 கோடி மதிப்பிலான வாட்ச் ரிட்டன் கிப்டாக கொடுத்திருக்கிறார்.

அத்துடன் ஒவ்வொருவருக்கும் அழைப்பிதழாக கொடுத்த ஒரு பத்திரிக்கை மட்டுமே 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கல்யாணத்திற்கு வரும் பிரபலங்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, சொகுசு கப்பலில் விருந்து என அனைவருக்கும் மிகப்பெரிய கவனிப்பு கொடுத்திருக்கிறார்.

அதிலும் மறக்கவே முடியாத அளவிற்கு திருமண விருந்தாக 2500 க்கும் மேற்பட்ட உணவுகளை கொடுத்திருக்கிறார். இப்படி ஆனந்த் அம்பானி கல்யாணத்திற்காக கிட்டத்தட்ட 5000 கோடி செலவுகளை செய்திருக்கிறார். ஆனாலும் நாம் இருக்கும் இந்த நாட்டுல 60% மக்கள் தினமும் 300 ரூபாய் கூட இல்லாமல் ரொம்பவே அவஸ்தப்பட்டு இருக்காங்க.

அப்படி இருக்கும் பொழுது இவர்கள் என்னதான் பணக்காரங்களாக இருந்தாலும் 5000 கோடியில் ஒரு கல்யாணத்தை நடத்தி வைத்திருக்கிறார் என்பது ஊர அடிச்சு உலையில போடுற மாதிரி இருக்கு என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் ஜியோ சிம்மை ஆரம்பத்தில் இலவசமாக கொடுத்துவிட்டு மக்களை மொபைலில் அடிமையாக்கி விட்டு அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக கட்டணத்தை கூட்டி தற்போது அதிகப்படியான கட்டணத்தை வசூலித்து வருகிறார்கள். இதை தான் சம்பாதிப்பதற்கான பணக்கார யுத்தி போல. அதனால் தான் அவர் இப்பொழுது கோடியில் புரளுகிறார். மகனுக்கு ஆடம்பர செலவு செய்து கல்யாணத்தை பண்ணி வைத்திருக்கிறார்.

கோலாகலமாக நடந்த அம்பானி வீட்டு கல்யாணம்

Trending News