வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 7, 2025

கடந்த ஆட்சியில் நடந்த 6000 கோடி ஊழல்.. 3 மடங்கு லாபத்தை கமுக்கமாக ஆட்டைய போட்ட அதானி

Adani 6000 crores corruption: நம் தாத்தா பாட்டி காலத்துல இருந்து இப்பொழுது வரை இரண்டு கட்சி மட்டுமே இங்கே ஆட்சி புரிந்து வருகிறார்கள். அதில் ADMK மற்றும் DMK. இவர்களுக்குள் தான் போட்டி நடக்குது என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு முறை மாற்றி மாற்றி ஜெயித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக தலைமையில் மறைந்த ஜெயலலிதா மற்றும் ஓ பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்தார்கள்.

அப்பொழுது நடந்த மோசடி ஒன்று இன்று அம்பலமாய் இருக்கிறது. அதாவது 2014 ஆம் ஆண்டு தரம் இல்லாத 17.5 லட்சம் டன் நிலக்கரியை உயர்தர நிலக்கரியாக ஏமாற்றி விற்பனை செய்திருக்கிறார்கள் அதானி குழுமம். அதுவும் காற்றின் தரத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய குறைந்த தரத்திலான நிலக்கரியை உயர்தரமான நிலக்கரி என்று பொய் சொல்லி 3 மடங்கு விலையை அதிகரித்து தமிழ்நாடு மின்வாரியத்திற்கு அதானி குடும்பம் விற்றதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

கமுக்கமாக ஆட்டைய போட்ட அதானி, எப்படி தெரியுமா.?

இந்த முறைகேடு பற்றி OCCRP புலனாய்வு செய்து அமெரிக்காவின் Financial time நாளிதழ் நடத்திய மதிப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது. அதாவது 2014ஆம் ஆண்டு குழுமம் நிலக்கரியை ஒரு டன்னுக்கு நிலக்கரியை $28 விலையில் வாங்கி, அதை அதிக கலோரி நிலக்கரி என்று கூறி TANGEDCO-விடம் $92-க்கு விற்றுள்ளது.

ஆனால் இந்த பரிமாறுதல் இந்தோனேசியாவில் இருந்து நேரடியாக சென்னைக்கு தான் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதை இடையில் புகுந்து மூன்று மடங்கு லாபத்தை கமுக்கமாக ஆட்டையை போட்டது அதானி குழுமம் தான்.

தரமற்ற நிலக்கரியை அசால்டாக வாங்கிய குற்றச்சாட்டு மற்றும் கம்மி விலையில் இருந்த நிலக்கரியை மூன்று மடங்கு லாபத்தை கொடுத்து கிட்டத்தட்ட 6000 கோடியை நஷ்டப்படுத்தி இருக்கிறது அப்பொழுது கட்சியில் இருந்த நிர்வாகிகள்.

தரம் குறைந்த நிலக்கரி என்று தெரிந்தே விற்பனை செய்த அதானி குழுமம், அதை சரியாக சோதனை பண்ணாமல் அதிக விலையில் வாங்கிய கட்சி. இதெல்லாம் தெரிந்தும் தெரியாமல் போல் கண்டுக்காமல் இருந்த அரசாங்கம். பல ஆண்டுகளுக்கு பின் இப்பொழுது தான் இந்த மோசடி வெளி வந்திருக்கிறது.

Trending News