செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

65 வயசு, உருவ கேலி வடிவேலுவின் படம் இனி ஓட வாய்ப்பு இல்ல.. நாய் சேகர் பிளாப் என முன்பே கணித்த பிரபலம்

வைகைப்புயல் வடிவேலு 5 வருடத்திற்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மாதம் ரிலீஸ் ஆன நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு போதிய அளவு வரவேற்பு கிடைக்காமல் போனது.

எனவே விட்டதை படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்க வேண்டும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்த வடிவேலுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். ஆனால் இந்த படம் ஓடவே ஓடாத என ஒரு மாதத்திற்கு முன்பே அவருடைய 12 வருட கூட்டாளி சிங்கமுத்து சொல்லிவிட்டதாக தற்போது சோசியல் மீடியாவில் வைகைப்புயல் வடிவேலுவை கலாய்த்து தள்ளுகிறார்.

Also Read: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவுக்கு ஒர்க்கவுட் ஆகுமா, ஆகாதா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

இவர்களுக்கிடையே ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு போய்க்கொண்டிருக்கும் நிலையில், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் ஓடாதது. அவருக்கு வருத்தம் தான். இருப்பினும் நண்பராக இருப்பதால் வடிவேலுவை மனச தளர விடக்கூடாது என்றும் இதேபோன்று அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏதாவது ஒரு படம் கை கொடுத்து, அதன் மூலம் மீண்டும் மார்க்கெட்டை பிடித்துக் கொள் என்றும் நக்கலாக பேசுகிறார்.

ஆனால் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, புலி வருது புலி வருது என ஆஹா ஓஹோன்னு படத்தைப் பற்றி அள்ளிவிட்டார். ஆனால் படத்தைப் பார்த்தவர்கள் குப்பை என்றும் வேஸ்ட் என்றும் கருத்து பதிவிட்டார்களாம்.

Also Read: வடிவேலு இல்லன்னா நீங்க இல்லை.. ஆதங்கத்துடன் சிங்கமுத்து கூறிய பதில்

அதேபோல் 65 வயதான வடிவேலுக்கு முன்பு இருந்தது போல் முகத்தோற்றமும் சுறுசுறுப்பும் இல்லாமல் போனதாகவும், சிங்கமுத்து வடிவேலுவை குறித்து உருவ கேலி செய்திருக்கிறார். மேலும் கார்கூட சர்வீஸ் செய்து வைத்திருந்தும் 5 வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. அதே போல் தான் வடிவேலு நடித்த காலமெல்லாம் மலையேறி விட்டது.

இனிமேலும் அவர் முயற்சி செய்வது பாராட்டுக்குரியது என்றாலும், அவளது உடல்நிலை ஒத்துழைக்காது என்றும் அவருடைய பழைய கூட்டாளி சிங்கமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் புகழ்வது போல் பழித்து பேசி இருக்கிறார்.

Also Read: வடிவேலு, சிங்கமுத்து இடையில் வெடித்த பிரச்சினை.. அப்படியே அலேக்காக தூக்கிய வருமானவரி துறையினர்

Trending News