சனிக்கிழமை, பிப்ரவரி 1, 2025

2000-ஆம் ஆண்டில் வரிசை கட்டி சீரியலுக்கு இறக்குமதியான ஏழு 90ஸ் ஹீரோயின்கள்.. கோலோச்சிய தேவயானி!

Serials: ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரைக்கும் தான் சின்னத்திரை, வெள்ளித்திரை என்ற பெரிய பாகுபாடு இருந்தது. இதை மொத்தமாக உடைத்த பெருமை 90 ஹீரோயின்களை தான் சேரும்.

சொல்லி வைத்தார் போல் அரை டஜன் டாப் ஹீரோயின்கள் சீரியலில் இறக்குமதியானார்கள்.

வெள்ளித்திரையை விட சின்னத்திரை மக்களிடையே வரவேற்பு பெற்றுக் கொண்டிருப்பது புரிந்துகொண்டு அதன் பின்னர் அத்தனை பேரும் சின்னத்திரை பக்கம் ஓடி வந்தார்கள்.

சீரியல் பக்கம் கரை ஒதுங்கியா ஆறு ஹீரோயின்களை பற்றி பார்க்கலாம்.

ராதிகா: தேவர் மகன் படத்தில் சிவாஜி விதை நான் போட்டது என்று ஒரு வசனம் பேசி இருப்பார். உண்மையிலேயே ஹீரோயின்கள் தைரியமாக சீரியலுக்கு வர காரணமாக இருந்தது ராதிகா தான்.

சித்தி சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சன் டிவி பக்கம் கட்டி போட்டு வைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

சுகன்யா: நடிகை சுகன்யா டாப் ஹீரோயின் ஆக இருக்கும்போது அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

விவாகரத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்த சுகன்யாவுக்கு ஒன்று இரண்டு வாய்ப்புகள் தான் கிடைத்தன.

இதை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஆனந்தம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.

கோலோச்சிய தேவயானி!

தேவயானி: நடிகை தேவயானி தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின். ஆனால் இவருடைய சினிமா வாழ்க்கையை மறக்கடித்தது கோலங்கள் சீரியல்.

இன்றுவரை தேவயானியை எங்கே பார்த்தாலும் கோலங்கள் அபி என்று தான் மக்கள் அன்போடு பேசுகிறார்கள்.

குஷ்பூ: நடிகை குஷ்பூ சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் முதல் முதலில் கால் தடம் பதித்தார். ஜெயா டிவியில் ஒளிபரப்பான கல்கி சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

மீனா: நடிகை மீனா சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அத்தோடு கல்யாணம் என்ற சீரியலிலும் ஹீரோயினாக நடித்தார்.

இந்த சீரியல் ஒரு சில காரணங்களால் மூன்று மாதங்களுக்குள் முடிந்து விட்டது.

நளினி: நடிகை நளினிக்குள் இப்படி ஒரு நடிப்பு அரக்கி இருப்பது வெளியில் தெரியவந்தது சீரியல் மூலம் தான்.

சன் டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ண தாசி சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தார். கோலங்கள் சீரியலில் தேவயானியின் மாமியாராக மிரட்டி இருப்பார்.

சுவலட்சுமி: நடிகை சுவலட்சுமியை கடைசியாக திரையில் பார்த்தது சூலம் சீரியல் மூலம் தான். டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சுவலட்சுமி சன் டிவி சீரியலிலும் நடித்தார்.

அதன் பின்னர் மீடியாவில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

Trending News