என்னதான் திறமை இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம். அதிலும் ஹீரோவாக நடித்து வந்த சில நடிகர்கள் வாய்ப்பில்லாததால் அவர்கள் முன்னணி ஹீரோ படங்களில் சப்போர்ட் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனாலயே அவர்களுடைய சினிமா கேரியரில் ஹீரோ என்ற வாய்ப்பை தொலைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
கதிர்: இவர் மதயானை கூட்டம் படத்தின் ஹீரோவாக தமிழில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கிருமி, என்னோடு விளையாடு, பரியேறும் பெருமாள், சிகை போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்து மக்களிடம் பரிச்சயமானார். இந்நிலையில் விக்ரம் வேதா மற்றும் பிகில் படத்தில் சப்போர்ட்டிங் கேரக்டரில் வந்து நடித்திருக்கிறார். அதன் பிறகு இவர் ஹீரோவாக படங்களை நடிப்பதற்கு வாய்ப்பு குறைந்து விட்டது என்றே சொல்லலாம். இதுவே இவரால் சினிமாவில் வளர முடியாமல் போய்விட்டது.
ஜெய்: இவர் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்திலிருந்து சப்போர்ட்டிங் கேரக்டரில் தான் அறிமுகமானார். அதாவது பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாகவும், சென்னை 600028,
சுப்பிரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும் போன்ற நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் மிகக் குறைவு தான். ஒரு சில படங்களில் மட்டும் தான் தனியாக நடித்திருக்கிறார். அப்படியே இவர் தனியாக நடித்திருந்தாலும் அந்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை ஏற்படுத்தவில்லை.
Also read: அஞ்சலி-ஜெய் லிவிங் டு கெதர் முறிவிற்கு இதுதான் காரணம்.. பகிரங்கமாக போட்டு உடைத்த பிரபலம்
தினேஷ்: இவர் தமிழில் ஈ படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படத்தில் இவருக்கு அங்கீகரிக்கப்படாத கேரக்டராக அமைந்தது. இதனை அடுத்து எவனோ ஒருவன், ஆடுகளம், மௌனகுரு போன்ற படங்களில் நடித்தும் சொல்ற அளவுக்கு இவருக்கு கதாபாத்திரம் அமையவில்லை. அடுத்ததாக அட்டகத்தி படத்தின் மூலம் தான் மிகவும் பரிச்சயமானார் அதன் பின்னரே அட்டகத்தி தினேஷ் என்று பிரபலமாகிவிட்டார். இதனை அடுத்து எதிர்நீச்சல், பண்ணையார் பத்மினியும், குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை போன்ற பல படங்களில் இவருடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் இவர் நடித்த குக்கூ மற்றும் விசாரணை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இவர் தற்போது வரை ஒரு முன்னணி ஹீரோவாக வளர முடியாமல் தவித்து வருகிறார்.
கலையரசன்: இவர் சினிமாவில் நடிக்க வந்ததிலிருந்து தற்போது வரை சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் நடித்த மெட்ராஸ், சார்பாட்ட பரம்பரை, கபாலி படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதிலும் இவர் நடித்த மெட்ராஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த அளவுக்கு ஒரு திறமையான ஒரு நடிகர். அப்படி இருந்தும் இவருக்கான சரியான அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
Also read: மனதில் ஆழமாக பதிந்த கலையரசனின் 5 படங்கள்.. மெட்ராஸ் படத்தில் நட்புக்காக உயிர்விட்ட அன்பு
ஆரி: இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைசுழி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, உன்னோடு கா, நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார். இதன் மூலம் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனாலும் இவரால் தனியாக எந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
நந்தா: இவர் மௌனம் பேசியதே என்ற படத்தில் சூர்யாவுக்கு நண்பராக கண்ணன் என்ற கேரக்டரில் அறிமுகமானார். இதில் இவருடைய எதார்த்தமான நடிப்பை பார்ப்பதற்கு ரொம்பவே நன்றாக இருந்தது. இதனை தொடர்ந்து புன்னகை பூவே, செல்வம், கோடம்பாக்கம், ஈரம், அனந்தபுரத்து வீடு போன்ற பல படங்களில் நடித்து மிகவும் பரிச்சயமான நடிகராக வெளிவந்தார். ஆனாலும் தொடர்ந்து இவரால் சினிமாவில் தாக்குபிடிக்காமல் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்.
நரேன்: இவர் மலையாளம் நிழல்குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்த பிறகு தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிக்கோட்டை போன்ற பல படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். ஆனாலும் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி நடிக்கப் போய்விட்டார். பிறகு திரும்பி தமிழில் வரும்பொழுது இவருக்கு ஹீரோ வாய்ப்பில்லாமல் சப்போர்ட்டிங் கேரக்டரில் கைதி, விக்ரம் படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
Also read: பிக் பாஸ் போனது தான் நாங்க செஞ்ச தப்பு.. ஓவியா முதல் ஆரி வரை காணாமல் போன 7 நடிகர்கள்