சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

நடிகைகளை தாண்டி மனதில் பதிந்த 7 கதாபாத்திரங்கள்.. KGF படத்தில் பட்டையை கிளப்பிய மாளவிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இல்லாவிட்டாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர்களுக்கென்று தாய்மார்கள் மத்தியில் ஒரு கிரேஸ் இருக்கிறது. இதனால் நடிகைகள் பொறாமையில் பொங்கி வருகின்றனர்.

தீபா வெங்கட்: வானொலி தொகுப்பாளினியாக இருந்த இவர் சின்னத்திரையில் சித்தி, கோலங்கள் போன்ற சீரியல்களிலும், தில் படத்தில் விக்ரமுக்கு தங்கையாகவும், உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் பிரபு தேவாவிற்கு தங்கையாகவும் இன்னும் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர்.

Deepa
Deepa

அதுமட்டுமின்றி கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே முன்னணி கதாநாயகிகளாக தேவயானி, சினேகா, சிம்ரன், சங்கீதா, நயன்தாரா, தன்சிகா போன்ற நடிகைகளுக்க குரல் கொடுத்து அவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

சொர்ணமால்யா: சன் டிவியில் ஒளிபரப்பாகிய இளமை புதுமை என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நுழைந்த சொர்ணமால்யா அதன்பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தின் கதாநாயகி ஷாலினியின் அக்காவாக பொன்னி கதாபாத்திரத்தில் நடித்து வெகு சீக்கிரமே ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த், நமீதா நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தில் விஜயகாந்த்தின் தங்கையாக பார்வதி கதாபாத்திரத்தில் சொர்ணமால்யா சென்டிமென்டாக நடித்து தாய்மார்களின் மனதை கவர்ந்தார்.

பிறகு 2007 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா இவர்களுடன் சொர்ணமால்யா 2வது கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படத்தில் சொர்ணமால்யாவின் நடிப்பு பலரை ஈர்த்தது. இந்தப்படத்திற்கு இவருக்கு கிடைத்த வரவேற்பால் முன்னணி நடிகைகளும் பொறாமையில் பொசுங்கினர்.

அர்ச்சனா: பிரபல சின்னத்திரை தொகுப்பாளராக இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியில் நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தொகுத்து வழங்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இளமை புதுமை, கலக்கப்போவது யாரு என பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடம் ரசிகர்களால் செல்லமாக அச்சுமா என அழைக்கப்பட்ட இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று விஜயின் டிவியிலும் வலம்வந்தார்.

vj-archana

இப்படி தொகுப்பாளராக கலகலப்புடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ச்சனாவிற்கு முன்னணி நடிகர்கள் நடிகைகளின் அளவுக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் தனது மகள் சாராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையையும் கலக்கினார்.

மாளவிகா அவினாஷ்: கே பாலச்சந்தர் இயக்கிய அண்ணி சீரியலின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பரிச்சயமான இவர் ஜேஜே படத்தில் கதாநாயகி ஜமுனாவின் சகோதரியாக தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி தாய்மார்களின் மனதை கவர்ந்தவர்.

kgf
kgf

அதன் பிறகு ஆறு படத்தில் கலாபவன் மணி மனைவியாகவும், டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தாயாகவும், ஆதி படத்தில் ராமச்சந்திரன் மனைவியாகவும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். முக்கியமாக ரசிகர்கள் மனதில் பதிந்த தேதியை படத்தில் கதை சொல்லும் ஒரு கதாபாத்திரத்தை இன்டர்வியூ செய்பவர் மாளவிகா,  அந்தக் காட்சிகளின் மூலம் அடித்தட்டு மக்கள்  மனதில் பதிவாகி விட்டார்.

வினோதினி வைத்தியநாதன்: ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தில் செல்வி கதாபாத்திரத்தில் கதாநாயகியின் அக்காவாக முன்னணி நடிகைகளும் பொறாமைப்படும் அளவுக்கு மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

அதே போன்று கடல் படத்தில் மீனவப் பெண்ணாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காவல் அதிகாரியாக, பசங்க 2, அப்பா, அரண்மனை2, ஆண்டவன் கட்டளை என அடுத்தடுத்த பல படங்களில் தனது தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி தாய்மார்களை கவர்ந்திருக்கிறார்.

தேவதர்ஷினி: ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர் அதன்பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதிலும் 2010 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா படத்தில் கோவை சரளாவின் மருமகளாக இணைந்து நடித்து, இவர் செய்திருக்கும் அலப்பறை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

இதன்பிறகு பெண் நகைச்சுவை நடிகைகளான மனோரமா, கோவை சரளாவின் வரிசையில் இவரது பெயரைச் சொல்ல வைத்தது. பெரும்பாலும் அண்ணி, அக்கா கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

ஷீலா ராஜ்குமார்: ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் கதாநாயகியாக தோன்றிய இவருடைய கணீர் குரல் மற்றும் துடிப்பான நடிப்பு பலரை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு ஆறுவது சினம் படத்தில் வளர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

sheela
sheela

அதன்பிறகு நம்ம வீட்டு பிள்ளை படத்தில் துளசியின் தாயாகவும், திரௌபதி படத்தில் திரௌபதி ஆகவும், மண்டேலா படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.

இவ்வாறு இந்த 7 நடிகைகளும் முன்னணி நடிகைகளாக வராவிட்டாலும் அவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் சிறப்பாக நடித்து தங்களது இருப்பை தக்க வைத்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார்கள்.

- Advertisement -spot_img

Trending News