7 actresses who acted as child stars and became heroines: இன்று சினிமாவில் பிரபலங்களாக ஜொலிக்கும் பலரும் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து சிறு சிறு கேரக்டரில் நடித்து தற்போது பிரபலங்களாக வளர்ந்திருக்கிறார்கள். அந்த வகையில் குழந்தையாக நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.
ஹன்சிகா: இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தனுசுக்கு ஜோடியாக அறிமுகமானார். இதில் இவருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்தார். ஆனால் அதற்கு முன் பாலிவுட் திரையுலகில் 2001 முதல் 2010 வரை குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
நிவேதா தாமஸ்: 90ஸ் கிட்ஸ்க்கு மிகவும் பிரபலமான மை டியர் பூதம் என்ற சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலமானார். இவருக்கு பாடுவதன் மூலம் அதிக ஆர்வம் இருந்ததால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் இதில் பெரிதாக இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் நடிப்பு மீது முழு கவனத்தையும் செலுத்தி ஹீரோயினாக தமிழில், நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து கேரள மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
நஸ்ரியா: 2006 ஆம் ஆண்டு 4 மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழில் நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் விழுந்துவிட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு எக்ஸ்பிரஸ் குயின்னாக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இவர் பகத் பாசிலை காதலித்து கல்யாணம் பண்ணினாலும் மறுபடியும் நடிக்க வரமாட்டாரா என்று ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு சினிமாவில் இவருக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
ஸ்ரீதிவ்யா: 2000ம் ஆண்டு அனுமன் சந்திப்பு என்ற தெலுங்கு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஒரு சில படங்களில் நடித்த பின்பு சிறந்த குழந்தை நடிகைக்கான நந்தி விருதையும் பெற்றார். அதன் பின் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் நிலையான இடத்தை பிடிக்காமல் தத்தளித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்: 2000 ஆண்டு மலையாள படத்தின் மூலம் குழந்தை கேரக்டரில் நடித்து அறிமுகமானார். இவருடைய தந்தை தயாரிப்பாளர் என்பதால் சினிமாவில் எளிதாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனாலும் இவருடைய நடிப்புக்கு எந்தவித குறையும் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப இருந்ததால் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று முன்னணி ஹீரோகளுக்கு ஜோடி போட்டு நடித்து தற்போது இவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
மஞ்சிமா மோகன்: இவர் 1997 மற்றும் 2001 வரை 8 மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பின் தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். அடுத்ததாக நடிகர் கௌதமை காதலித்து கல்யாணம் பண்ணி குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டார்.
நித்யா மேனன்: தமிழில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் எந்த கேரக்டர் ஆனாலும் நடிப்பேன் என்று துணிச்சலாக நடிக்கக்கூடிய நடிகை. அதிலும் நித்யா மேனன் நடித்த படங்கள் எதுவாக இருந்தாலும் அந்த படம் வெற்றியாகும் என்ற ராசியும் இவருக்கு இருக்கிறது. இதனை தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் சினிமாவிற்குள் 1998 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக ஹனுமன் என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் நுழைந்தார்.
இதே மாதிரி இவர்களுக்கு முன் ஸ்ரீதேவி, மீனா, ஷாலினி, ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோயின்களாக ஜொலித்திருக்கிறார்கள்.