திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

வயசானாலும் அழகும், கவர்ச்சியும் குறையாத 7 நடிகைகள்.. மேகியாக வலம் வரும் ஜெயிலர் பொண்டாட்டி

Actress Nadiya: நடிகைகளை பொறுத்தவரை அவர்களது இளம் வயது அல்லது திருமணம் ஆகும் வரை மட்டும் தான் அவர்களுக்கு மார்க்கெட் இருக்கும். ஆனால் அண்மைக் காலமாக நடிகைகள் பலரும் 40 வயதை தாண்டிய நிலையிலும் முகத்தில் சுருக்கம் இல்லாமல், என்றுமே இளமை பதுமைகளாகவே இருக்கின்றனர். அதிலும் சில நடிகைகள் திருமணமாகி, குழந்தை பெற்ற பிறகு கூட ரசிகர்களை தங்கள் அழகால் மயக்கி வருகின்றனர். அப்படிப்பட்ட 7 நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

நதியா: 80 களின் கனவுக்கன்னியான இவர், எப்போதுமே நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவர். கவர்ச்சியில்லாமல் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது துணை கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார். அதிலும் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடிக்க ஆரம்பித்த இவர், தொடர்ந்து அல்லு அர்ஜுன், ஹரிஷ் கல்யாண், சமந்தா என பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இவரை பார்க்கும்போது அம்மா என்ற உணர்வே வராத அளவுக்கு 57 வயதிலும் அழகில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

Also Read: 24 வருடத்திற்கு முன் விட்ட சபதத்தை நிறைவேற்றிய ரம்யா கிருஷ்ணன்.. கல்யாணத்தில் முடிந்த லட்சியம்

ரம்யா கிருஷ்ணன்: அம்மன், ராஜமாதா, நீலாம்பரி, ஜெயிலர் பொண்டாட்டி என பல கதாபாத்திரங்களில் நடித்து 80களிலிருந்து தற்போது வரை ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு 52 வயதாகியும், இன்றும் பார்ப்பதற்கு 20 வருடங்கள் முன்னாள் பஞ்சதந்திரம் படத்தில் இவர் நடித்த மேகி கதாபாத்திரம் போன்ற தோற்றத்திலேயே தற்போதும் வலம் வருகிறார். அண்மையில் ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டாரின் மனைவியாக இவர் நடித்தையடுத்து தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஜோதிகா: 2000 ஆண்டின் கனவு கன்னியான நடிகை ஜோதிகா, பெருமளவு கவர்ச்சி இல்லாமல் தனது முட்டைக்கண்ணை உருட்டி, உருட்டி நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதுமட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவை காதலித்து கரம்பிடித்த இவர், பல வருடங்களுக்கு பின் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜோதிகா, தனது 45 வயதிலும் இளமை மாறாமல் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

சினேகா: தமிழ், தெலுங்கு என 2000 ஆண்டுகளில் கனவுகன்னியாக வலம் வந்த இவர்,தனது புன்னகையால் இளசுகள் முதல் பெருசுகள் வரை கவர்ந்தவர். தொடர்ந்து விஜய், கமல், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இத்தம்பதிக்கு ஒரு மகன்,மகள் உள்ள நிலையில், 42 வயதிலும் இளமையாக வலம் வருகிறார்.

Also Read: சிரிப்பழகி சினேகாவை டேட்டிங் செய்த 4 ஹீரோக்கள்.. உதடு கடி பிரச்சனையால் மண்ணைக் கவ்விய தரமான படம்

மஞ்சு வாரியார்: மலையாள நடிகையான இவர், தமிழில் அசுரன், துணிவு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 45 வயதாகும் மஞ்சு வாரியாருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ள நிலையில், படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார். கொஞ்சம் உடல் பருமனாக மஞ்சுவாரியர் இருந்த நிலையில், கடந்தாண்டு உடலை குறைத்து இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் மாறி ரசிகர்களின் வாயை பிளக்க வைத்துள்ளார்.

திரிஷா: கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்தியாவின் ராணியாக வலம் வரும் திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். 40 வயதை அடைந்த திரிஷா, பார்ப்பதற்கு 20 வயதுடைய பெண் போல் தனது இளமையை தக்க வைத்து வருகிறார். மேலும் தற்போது வரை திருமணம் செய்துக்கொள்ளாமல் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ள திரிஷா, 14 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள லியோ படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

நயன்தாரா: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, தொடர்ந்து 20 ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். மேலும் பாலிவுட்டிலும் கால்பதித்த இவர், ஷாரூக்கானுடன் ஜோடிப்போட்டு ஜவான் படத்தில் நடித்துள்ளார்.
39 வயதாகும் நயன்தாரா தற்போது வரை இளமையாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Also Read: இந்த ரெண்டு விஷயங்களால் சிம்பு பரம எதிரியாக நினைக்கும் ஹீரோ.. நயன்தாராவுடன் சேரவிடாமல் தடுத்த விஷப்பூச்சி

Trending News