70, 80’ஸ் காலகட்டத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவராக மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்திய நடிகர்களுள் ஒருவர் செவிலியர் சிவாஜி கணேசன். இவர் நடிக்கும் படங்களில் நடிப்பையும் தாண்டி அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி இருப்பார். நடிகர் திலகம் என்றால் சிவாஜி கணேசன் தான் என்ற அளவிற்கு தனது நடிப்பு திறமையால் தமிழ் திரை உலகில் ஆதிக்கம் செலுத்தினார். இவருடைய நடிப்பில் 70-களில் வெளியான 7 படங்கள் தொடர் வெற்றிகளை தந்தது மட்டுமல்லாமல் வெள்ளி விழாவும் கண்டுள்ளது.
நீதி: 1972 ஆம் ஆண்டு இயக்குனர் சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் வித்தியாசமான கதை அமைப்பில் வெளியாகி திரையில் ஆதிக்கம் செலுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. படத்தில் சிவாஜி கணேசன் உடன் ஜெயலலிதா, சௌகார் ஜானகி, மனோரமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நீதி திரைப்படத்தில் ராஜா என்னும் கதாபாத்திரத்தில் கொலைக் குற்றவாளியாக நடித்திருப்பார். இதில் இவருக்கு கிடைக்கும் 2 ஆண்டு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி கொடுக்கும்படி உத்தமமான மனிதராக நடித்து அசத்தி இருப்பார். இதனால் பலரின் நெஞ்சத்தை கரைய வைத்த இந்த படம் திரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது.
ஞான ஒளி:இயக்குனர் பி மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜய நிர்மலா, சாரதாஸ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். இதில் சிவாஜியின் நடிப்பு பல முன்னணி நடிகர்களையும் ஆச்சரியப்பட வைக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும். ஞான ஒளி படம் 100 நாட்களுக்கு மேல் திரையில் ஓடி வெற்றி பெற்றது.
Also Read: தேசிய விருது வாங்கிய முதல் 5 தமிழ் படங்கள்.. சிவாஜியை முந்திய எம்ஜிஆர்
பட்டிக்காடாம் பட்டணமாம்: ஞான ஒளி படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவாஜி கணேசன் பி மாதவனின் கூட்டணியில் பட்டிக்காடாம் பட்டினமாம் என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது. இதில் சிவாஜி கணேசன் உடன் ஜெயலலிதா, சுபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரையில் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டு சாதனை படைத்தது .
தர்மம் எங்கே: இயக்குனர் ஏ.சி. திரிலோக சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தை சாந்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இதில் சிவாஜி கணேசன், ஜெ ஜெயலலிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனால் இந்த படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்காவிட்டாலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த படமாக அமைந்தது.
Also Read: சிவாஜிக்கு பெருமையை சேர்த்த படம்.. 80 அடி கட் அவுட்டால் ஸ்தம்பித்த சென்னை
தவப்புதல்வன்: அதே ஆண்டு வெளியான இப்படத்தை முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இதில் சிவாஜியுடன் கேஆர் விஜயா, பண்டாரிபாய் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிவாஜி கணேசன் மற்ற ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இப்படம் திரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படங்களில் ஒன்றாக அமைந்தது.
வசந்த மாளிகை: இயக்குனர் கே எஸ் பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த வசந்த மாளிகை திரைப்படம் அந்த ஆண்டின் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும். இதில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, பி எஸ் ராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரையில் 200 நாட்களுக்கு மேல் ஓடி அந்த காலகட்டத்திலேயே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் சிவாஜி கணேசனின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது .
ராஜா: இது நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படங்களில் ஒன்று. இதில் சிவாஜி கணேசன் உடன் ஜெயலலிதா நடித்திருப்பார். இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்து சிவாஜி கணேசனின் வருடமாக்கியது. படத்தில் சிவாஜி கணேசனின் தோற்றம் ரசிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும். .
இவ்வாறு 1972 ஆம் ஆண்டில் மட்டும் சிவாஜி தொடர் 7 வெற்றிகளை குவித்து அந்த ஆண்டின் நாயகனாகவே மாறினார். அத்துடன் சிவாஜியின் வசந்த மாளிகை, பட்டிக்காடா பட்டினமாம் என்ற இரு படங்களும் வெள்ளி விழா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.