Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஜூன் 20 வெளியாகும் 7 படங்கள்.. குபேராவுக்கு முட்டுக்கட்டை போட வரும் பாலிவுட் நடிகர்

ஜூன் 20 வெளியாகும் 7 படங்கள்.. குபேராவுக்கு முட்டுக்கட்டை போட வரும் பாலிவுட் நடிகர்

Dhanush : கடந்த வாரம் விஜயகாந்தின் மகனின் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படை தலைவன் படம் வெளியானது. இந்த சூழலில் இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தாக கிட்டத்தட்ட ஏழு படங்கள் வெளியாகிறது. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், […]

Dhanush : கடந்த வாரம் விஜயகாந்தின் மகனின் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படை தலைவன் படம் வெளியானது. இந்த சூழலில் இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தாக கிட்டத்தட்ட ஏழு படங்கள் வெளியாகிறது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் குபேரா. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வருகின்ற ஜூன் இருபதாம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

அடுத்ததாக நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் டிஎன்ஏ படம் உருவாகி இருக்கிறது. இந்த படமும் தனுஷின் குபேராவுக்கு போட்டியாக இறங்குகிறது. அடுத்ததாக மலையாளத்தில் பிரவீன் நாயர் இயக்கத்தில் ஜானகி vs கேரளா மாநிலம் படம் வெளியாகிறது.

ஜூன் 20 தியேட்டரில் வெளியாகும் 7 படங்கள்

இதில் சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதை அடுத்து பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கிறது சிதாரே ஜமீன் பர். இந்தப் படத்தில் அமீர்கான் கூடைப்பந்து பயிற்சியாளர்கள் நடித்திருக்கிறார்.

அடுத்ததாக அனிமேஷன் படமாக எலியோ படம் வெளியாகிறது. இந்த படத்திற்கு குழந்தைகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் அலிசன் வில்லியம்ஸ், வயலட் மெக்ரா மற்றும் இவானா சக்னோ ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிறது M3GAN 2.0.

மேலும் இதில் குறிப்பாக அமீர்கானின் படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. இதனால் தனுஷின் குபேரா மற்றும் அதர்வாவின் டிஎன்ஏ படங்களுக்கு போட்டியாக இருக்க உள்ளது. ஆகையால் எந்த படம் வசூலை அள்ளுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.