புதன்கிழமை, ஜனவரி 15, 2025

புரட்சியை தூண்டி சிலிர்க்க வைத்த 7 படங்கள்.. ஆனா அதுல ரெண்டு படம் படுதோல்வி

7 films that sparked a revolution and won: நம் தேசத் தலைவர்களால் புரட்சி ஒன்று ஏற்படாவிடில் நாம் அடிமையாக தான் இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாதவாறு அடிமை தளையில் கட்டுண்டு  கிடந்தோம் நாம். பாட புத்தகத்தில் மட்டும் நாம் படித்ததை உணர்ச்சிப் பெருக்குடன் உணர வைத்தனர் நம் நடிகர்கள் அவ்வாறு புரட்சியை தூண்டிய 7 படங்களை காணலாம்.

வீரபாண்டிய கட்டபொம்மன்: வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் சிவாஜி மட்டுமே.1959 ஆண்டு ராமகிருஷ்ணையா பந்தலு இயக்கத்தில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் சிவாஜியை காணவில்லை கட்டபொம்மனை தான் கண்டோம்.  திருப்பூர் குமரன், வ உ சிதம்பரனார் போன்ற தேசத் தலைவர்களின் தியாகத்தையும் சுதந்திர போராட்ட உணர்வையும் நமக்குள் வித்திட்டவர் சிவாஜி கணேசன் மட்டுமே. 

உன்னால் முடியும் தம்பி:  மதுவினால் சீர்கேடான சமூகத்தை மாதர்கள் மூலம் சுத்தப்படுத்திய திரைப்படமே கே பாலச்சந்தரின் உன்னால் முடியும் தம்பி.  கமல், மனோரமா, ஜெமினி கணேசன், சீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பல புரட்சிகரமான கருத்துக்களை எடுத்துக் கூறினர். ஆனால் படம் தோல்வி அடைந்தது.

இந்தியன்: ஊழலுக்கு எதிரான அதிரடியான நடவடிக்கைகளை கையில் எடுத்தார் இந்தியன் தாத்தா.1996 ஆண்டு கமல் மற்றும் சுகன்யா நடிப்பில் வெளிவந்த இந்தியன் திரைப்படம் மாபெரும் வசூலை எட்டியதுடன் கமலுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

ஹேராம்: கமல் மற்றும் ஷாருக்கான் நடித்த திரைப்படத்தில் அகிம்சையை ஹிம்சையான முறையில் வெளிப்படுத்தி இருந்தார் கமல். புரியாத புதிரான இத்திரைப்படத்தில் பல முற்போக்கான சிந்தனைகளை கூறி  தீவிரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகள் மூலம் ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி இருந்தார் கமல். ஆனால் படம் தோல்வி அடைந்தது.

ரமணா ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி

ரமணா: ஊழலுக்கு எதிராக தனி ஒருவனாக போராடாமல் சீர்திருத்த கருத்துக்களுடன் கூடிய மாணவர் படையுடன் கூட்டணி அமைத்து, அரசின் அனைத்து துறைகளையும் அல்லாட செய்திருந்தார் இந்த ரமணா.

அது மட்டுமா மனிதர்களின் இயலாமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றும் கார்ப்பரேட்டை அவர்கள் வழியிலே சென்று ஏமாற்றி இருப்பார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த இத்திரைப்படம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஊட்டியது.

கர்ணன்: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம், சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் நாயகனின் கோபமாக அமைந்தது. ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெற முடியாத நியாயத்தை அதிரடியாக பெற்று தர்மத்தை நிலை நாட்டினார் இந்த கலியுக கர்ணன்.

விடுதலை: பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் நடவடிக்கைகளையும், அநியாயங்களையும், வேரருக்கும் போராளியின் கதையாக அமைந்தது வெற்றிமாறனின் இந்த விடுதலை. சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மாபெரும் வெற்றியை குவித்து வரும் விடுதலையின் அடுத்த பாகத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளனர் ரசிகர்கள்.

Trending News