செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

10 நாள் நவராத்திரி விடுமுறையை குறி வைக்கும் 7 படங்கள்.. லியோ வசூலில் சாவுபயத்த காட்டிடுவாங்க போல!

Navarathiri Holiday Movies: தற்போது ஒன் மேன் ஆர்மியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் அனைத்து திரையரங்குகளையும் ஆக்கிரமித்து வசூல் அளவில் வெற்றி பார்த்து வருகிறது. கிட்டத்தட்ட 500 கோடி வசூலை பெற்று ரஜினிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

மேலும் அந்த வாரம் முழுவதும் நவராத்திரி பூஜை தினத்தை முன்னிட்டு கிட்டத்தட்ட 10 நாட்கள் விடுமுறையாக இருக்கிறது. இதனால் கண்டிப்பாக லியோ படம் ஜெயிலர் படத்துக்கு இணையாக வசூலை பெற்று விடும் என்ற ஒரு நிலைமை இருந்தது. ஆனால் தற்போது லியோ படத்திற்கு போட்டியாக அதே நாட்களில் பல மொழிகளிலிருந்து முன்னணி நடிகர்கள் படமும் வெளியாக உள்ளது. அது என்னென்ன படங்கள் என்று தற்போது பார்க்கலாம்.

Also read: கறி சோறு போடுறேன்னு ஏமாற்றிய ரஜினி.. 500 கோடி வசூல் செஞ்சாலும் இந்த விஷயத்துல கஞ்ச பிசுநாரியாம்

அதாவது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள பகவந்த் கேசரி திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி அன்று ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதே மாதிரி ரவி தேஜா நடிப்பில் டைகர் நாகேஸ்வரா என்ற திரைப்படமும் மறுநாள் அக்டோபர் 20ஆம் தேதி திரையரங்குகளுக்கு வருகிறது. இவர்கள் இருவருமே தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரிட் ஆன நடிகர்கள்.

இப்படி இருக்கும் பொழுது அங்கு லியோ படம் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதே மாதிரி டைகர் ஷெராப் நடிப்பில் கணபத் என்கிற திரைப்படமும், தேஜாஸ் என்ற படத்தில் கங்கனா ரனாவத்தும் நடித்திருக்கிறார். இப்படி இவர்கள் நடித்த இரண்டு படங்களுமே அக்டோபர் 20ஆம் தேதி பாலிவுட்டில் ரிலீஸ் ஆகிறது.

Also read: விஜய்யின் அரசியலுக்கு புதிதாக கிளம்பிய பூகம்பம்.. ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் தளபதி

இதனைத் தொடர்ந்து கன்னட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள கோஸ்ட் திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது. அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் ஏ ஆர் ரகுமான் இசையில் அக்டோபர் மாதம் வெளி வருகிறது.

இப்படி தொடர்ந்து இந்த படங்கள் அனைத்தும் பத்து நாள் நவராத்திரி விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளை அலங்கரிக்க வருகிறது. முக்கியமாக லியோ படத்தின் வசூல் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எப்படியாவது ஜெயிலர் வசூலை லியோ படத்தின் மூலம் முறியடித்து விட வேண்டும் என்று விஜய் கனவு கோட்டை கட்டி இருக்கிறார். இது தற்போது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.

Also read: விஜய்க்கு கன்டென்ட் கொடுத்த முத்துவேல் பாண்டியன்.. லியோ மேடையில் சம்பவம் செய்ய போகும் தளபதி

Trending News