Rajinikanth: எந்த படம் ஹிட் ஆகும், எது தோல்வியாகும் என யாராலும் கணிக்க முடியாது.
இன்று தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களே மிஸ் பண்ணிய சூப்பர் ஹிட் படங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி நடிகர்கள் மிஸ் பண்ணி பெரிய அளவில் வெற்றி பெற்ற படங்களை பற்றி பார்க்கலாம்.
டாப் ஹீரோக்கள் மிஸ் பண்ணிய ஹிட் படங்கள்
முதல்வன்: அர்ஜுன்- ரகுவரன் நடிப்பில் பெரிய அளவில் மாஸ் பண்ணிய படம் முதல்வன். இந்த படம் அப்போதைய காலகட்டத்திலேயே 41 கோடி வரை வசூல் செய்தது.
இன்று வரை இயக்குனர் சங்கருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு முதன் முதலில் சங்கர் நடிகர் ரஜினிகாந்தை தான் அணுகினார்.
ஆனால் அவ்வளவு கனமான அரசியல் கதை களத்தில் நடிப்பதற்கு ரஜினி தயாராகவில்லை.
எந்திரன்: கோலிவுட்டில் முதல் பெரிய பட்ஜெட் படம் என்று எந்திரனை சொல்லலாம். அதே அளவுக்கு இந்த படம் வசூலில் வெற்றிக்கொடி நாட்டியது.
முதன் முதலில் இந்த படத்தில் கமலஹாசன் தான் நடிப்பதாய் இருந்தது. இயக்குனர் சங்கர் மற்றும் கமல் இருவரும் இணைந்து படத்தின் வேலைகளையும் தொடங்கினர்.
ஆனால் அப்போதைய காலகட்டத்தில் இந்த படத்தை எடுப்பது ரொம்ப கஷ்டமாக இருந்ததால் கைநழுவி போனது.
துப்பாக்கி: இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தில் முதன் முதலில் நடிக்க சூர்யாவை தான் அணுகியிருக்கிறார்.
ஏற்கனவே முருகதாஸ் சூர்யாவுக்கு கஜினி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர். இருந்தும் படத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் சூர்யா இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை.
சிங்கம்: சூர்யாவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது சிங்கம். படத்தின் இயக்குனர் ஹரி இந்த படத்தில் நடிப்பதற்கு முதன் முதலில் விஜய்யிடம் தான் கதை சொல்லி இருக்கிறார்.
ஆனால் விஜய் இந்த படத்தில் கமிட்டாகவில்லை.
மகாராஜா: நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்நாள் ஹிட் படமாக அமைந்தது தான் மகாராஜா. இந்த படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பதாக இருந்தது.
ஆனால் புரொடக்ஷன் வேலைகள் தாமதமானதால் சிவா இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
கஜினி: சூர்யாவின் சினிமா கேரியரில் காக்க காக்க படத்திற்கு பிறகு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது கஜினி படம் தான்.
இந்த படத்தின் கதையை முருகதாஸ் முதலில் மாதவனுக்கு தான் சொல்லி இருக்கிறார். ஆனால் மாதவனுக்கு கதையின் மீது நம்பிக்கை இல்லாததால் இந்த படத்தை ரிஜெக்ட் செய்து விட்டார்.
காக்க காக்க: சூர்யாவை அதிரடி ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படம் காக்க காக்க. நந்தாவுக்கு பிறகு சூர்யாவுக்கு அமைந்த வெற்றி படம் தான் இது.
இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது அஜித்குமார் தான். கதையை முடிக்க நீண்ட நாட்கள் ஆகியதால் அட்மிட் இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.