திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முதல் நாளே 100 கோடி வசூல் செய்த 7 படங்கள்.. ஷாருக்கானுக்கு முன்பே சாதித்த நம்ம சூப்பர் ஸ்டார்

இந்திய சினிமாவில் கடந்த சில தினங்களாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் பயங்கர வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து நடித்த இந்த ‘பதான்’ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே 100 கோடி வசூல் செய்தன. ஆனால் இதற்கு முன்பே 7 திரைப்படங்கள் இதே போன்று முதல் நாளில் 100 கோடி வசூல் செய்திருக்கிறது.

பாகுபலி 2: இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. இதற்கு காரணம் பாகுபலி படத்தின் முதல் பாகம் தான். வரலாற்று படங்களிலேயே ரொம்பவும் வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் இருந்ததால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Also Read: பாலிவுட்டை தூக்கி நிறுத்தினாரா ஷாருக்கான்.? இணையத்தில் கொண்டாடும் பதான் பட ட்விட்டர் விமர்சனம்

2.0: 100 கோடி வசூல் சாதனையை கோலிவுட்டில் ஜெயித்து காட்டியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்-சங்கர் கூட்டணியில் வெளியான எந்திரன் திரைப்படம் பிரம்மாண்டம் என்றால் அதன் இரண்டாம் பாகம் 2.0 பிரம்மாண்டத்தின் உச்சம் என்று சொல்லலாம். இந்த படத்தில் பாலிவுட் ஹீரோ அக்சய் குமார் இணைந்தது நல்ல ரீச்சை கொடுத்தது.

கபாலி: அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய இளம் இயக்குனரான பா.ரஞ்சித்துக்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த வாய்ப்பு தான் கபாலி. இந்த வித்தியாசமான கூட்டணி ஜெயித்தும் காட்டியது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் பாட்ஷாவை நியாபகப்படுத்தியிருந்தார். இந்த படம் மலேசியாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

சாகோ: பிரபாஸ் நடிப்பில் பாகுபலி திரைப்படத்திற்கு வெளியான படம் சாகோ என்பதால் இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியது. படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், முதல் நாளிலேயே 100 கோடியை அள்ளிவிட்டது.

Also Read: 4 வருடங்களுக்குப் பிறகு பட்டையை கிளப்பிய ஷாருக்கான்.. முதல் நாள் வசூலை கேட்டா சும்மா தல சுத்துதில்ல

ஆர்ஆர்ஆர்: ஆஸ்கர் மேடை வரை இந்திய சினிமாவை அழைத்து சென்று பெருமை சேர்த்த படம் இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர். இந்த படம் சுதந்திரத்திற்கு முன்னான இந்தியாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

கேஜிஎப் 2: கன்னட சினிமாவின் மிகப்பெரிய அடையாளம் என்றால் அது கேஜிஎப். இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய ரீச் ஆனதற்கு காரணம் முதல் பாகம் தான். இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமே தமிழ்நாடு திரையரங்களில் ஆட்டம் காண்டது.

பதான்: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பதான். இந்த படம் ரிலீசுக்கு முன்பு பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும், ரிலீசான முதல் நாளில் 100 கோடி வசூல் செய்தது.

Also Read: ஷாருக்கான் மகளை வளைத்துப் போட்ட சூப்பர் ஸ்டாரின் மகன்.. பின்னணியில் இருக்கும் காரணம்

Trending News