வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூர்யா அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்த ஜோதிகாவின் 7 படங்கள்.. வேட்டையனை ஓடவிட்ட சந்திரமுகி

Actress Jyothika Birthday: நடிகை ஜோதிகாவை 90ஸ் கிட்ஸ்களின் லேடி சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். நடிகைகள் எல்லாம் ஜீரோ பிகராக இருக்க வேண்டும் என நினைத்த நேரத்தில் சைஸ் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை நடிப்பு தான் முக்கியம் என நிரூபித்தவர் தான் ஜோ. இவர் பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து விட்டார். ஆக்டிங்னா இப்படித்தான் இருக்கணும் என ஜோதிகா நிரூபித்த ஏழு படங்களை பார்க்கலாம்.

குஷி: 90ஸ் கிட்ஸ் களின் எவர்கிரீன் ஃபேவரைட் படம் குஷி. விஜய் மற்றும் ஜோதிகா இதில் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். ஜோதிகா பெண் வேடத்தில் இருக்கும் எஸ்.ஜே சூர்யா போல் தான் தெரிவார் கண்ணுக்கு. அந்த அளவுக்கு அந்த கேரக்டரில் ஜெனியாகவே வாழ்ந்து விட்டார்.

மொழி: இந்த காலகட்டத்தில் ஹீரோயின்களுக்கான ஸ்டீரியோடைப்பை உடைத்து வாய் பேச முடியாத, காது கேட்காத பெண்ணாக மொழி படத்தில் நடித்திருப்பார். மொத்த உணர்வையும் தன் கண்கள் மூலமே காட்டி இருப்பார். அதிலும் இந்த படத்திற்காக ஜோதிகா சைகை பாஷை கற்றுக் கொண்டிருக்கிறார்.

காக்க காக்க: சாக்லேட் பாயாக சுற்றிக் கொண்டிருந்த சூர்யாவை ஆக்சன் ஹீரோவாக மீண்டும் காட்டிய படம் காக்க காக்க. முழு நீள ஆக்சன் படத்தில் கண்களுக்கு குளிர்ச்சியாக பல காட்சிகளில் வந்தவர் தான் மாயா. ஒரு ஊரில் அழகே என்ற பாடல் ஜோதிகாவிற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும்.

சந்திரமுகி: ஜோதிகாவா இது என படம் பார்த்த அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டது சந்திரமுகியை பார்த்து தான். ஜோதிகா முதலில் இந்த கேரக்டரில் நடிக்கிறார் என சொல்லும்போது எனக்கு நம்பிக்கையே இல்லை, ஆனால் தன் கண்களாலேயே அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விட்டார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திரமுகி வெற்றி விழாவில் மனம் திறந்து ஜோதிகாவை பாராட்டி இருந்தார்.

சிநேகிதியே: இன்று பலரும் சோலோ ஹீரோயின் ஆக நடிக்கிறார்கள். கமல், ரஜினி, அஜீத், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் தமிழ் சினிமாவின் முழுக்க ஆட்சி செய்து கொண்டிருந்த 2000 வருடத்தில் ஹீரோ இல்லாமல் ஜோதிகா தனிக்கதாநாயகியாக சிநேகிதியே படத்தில் நடித்திருப்பார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

சில்லுனு ஒரு காதல்: இன்றைய 2k கிட்ஸ்கள் வரை கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் தான் சூர்யா ஜோதிகா. இவர்கள் நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படம் இன்று வரை எல்லோருடைய ஃபேவரிட் ஆகவும் இருக்கிறது. இன்னும் பலருக்கும், திருமணம் ஆன பிறகு இந்த படத்தில் வரும் கௌதம் மற்றும் குந்தவைப் போல் தான் வாழ வேண்டும் என ரோல் மாடலாக இந்த கேரக்டர்களை வைத்திருக்கிறார்கள்.

36 வயதினிலே: கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோதிகா சினிமாவில் 36 வயதினிலே என்னும் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார். இந்தப் படம் ஜோதிகாவை சினிமாவுக்குள் மீண்டும் சிவப்பு கம்பளம் பிரித்து வரவேற்றது என்றே சொல்லலாம். ஹவ் ஓல்ட் ஆர் யூ என்னும் மலையாள படத்தின் ரீமேக் தான் இது.

Trending News