Comedy Actor Vadivelu: வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் பல தாக்கத்தை ஏற்படுத்தியவர். நகைச்சுவை மட்டும் இல்லாமல் பின்னணிப் பாடகர் ஆகவும் பல பாடல்களை பாடி இருக்கிறார். மேலும் தன்னை ஒரு நகைச்சுவை நடிகனாக மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் வடிவேலு இந்த ஏழு படங்களில் சீரியஸான காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
சங்கமம்: பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற கலையை மையமாகக் கொண்டு வெளியான படம் சங்கமம். இந்தப் படத்தில் தொடக்கத்தில் வடிவேலு காமெடி ரோல் பண்ணியிருந்தாலும், மணிவண்ணனுடன் வரும் சில குறிப்பிட்ட காட்சிகள் ரொம்பவே சென்டிமென்ட் ஆக இருக்கும். மணிவண்ணன் இறக்கும் காட்சியில் தன்னுடைய சிறந்த நடிப்பால் கலங்கடித்திருப்பார் வடிவேலு.
தேவர் மகன்: தேவர் மகன் திரைப்படத்தில் வடிவேலு நடித்த இசக்கி என்னும் கதாபாத்திரம் பல வருடங்கள் கழித்து இயக்குனர் மாரி செல்வராஜ் மூலம் மீண்டும் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மொத்த கதையும் வடிவேலுவை மையப்படுத்தியே இருக்கும். கொலைப்பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி கமலிடம் அருவாளை கேட்கும் காட்சியில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
எம்டன் மகன்: நடிகர்கள் நாசர் மற்றும் பரத் நடித்த எம்டன் மகன் திரைப்படத்தின் வடிவேலு படம் முழுக்க காமெடி காட்சியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். அதே நேரத்தில் கிளைமாக்ஸில் நாசரிடம் இவர் பேசும் காட்சி ஒட்டுமொத்த பெற்றோர்களுக்கும் சொல்லும் அறிவுரையாக இருக்கும். இந்த காட்சியில் நடிப்பில் பிச்சு உதறி இருப்பார் வடிவேலு.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி: வடிவேலு முதன் முதலாக கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இந்த படத்தில் அரசனாக வரும் வடிவேலு ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவையில் அசத்தியிருப்பார். அதே நேரத்தில் உக்கிர புத்திரன் கேரக்டரின் நடிக்கும் பொழுது கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு சிரிப்பு வராத அளவுக்கு சீரியஸாக மிரட்டி இருப்பார்.
Also Read:பிரபல இயக்குனரால் துரத்தி அடிக்கப்பட்ட வடிவேலு.. ஓவர் பப்ளிசிட்டியால் மார்க்கெட் இழக்கும் பரிதாபம்
ராஜ காளி அம்மன் : வைகை புயல் வடிவேலு ராஜகாளி அம்மன் திரைப்படத்தில் கௌசல்யாவுக்கு அண்ணனாக நடித்திருப்பார். அண்ணன் தங்கை சென்டிமென்டில் சீரியஸான நடிப்பில் வடிவேலு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதே படத்தில் அவர் பாடிய சந்தன மல்லிகையில் பாடல் இன்றுவரை சூப்பர் ஹிட் ஆக இருக்கிறது.
காமராசு: முரளி மற்றும் லைலா நடிப்பில் வெளியான திரைப்படம் காமராசு. இந்த படத்தில் முரளியின் நண்பராக வரும் வடிவேலு காமெடி காட்சிகளில் கலக்கியிருப்பார். அதே நேரத்தில் முரளியின் அம்மாவாக நடித்த வெண்ணிற ஆடை நிர்மலா இறந்து போகும் காட்சியில் வடிவேலு பேசும் வசனங்கள் மற்றும் அவருடைய முக பாவனைகள் படம் பார்க்கும் அத்தனை பேரையும் அழ வைத்திருக்கும்.
வரவு எட்டணா செலவு பத்தணா: குடும்ப கதைகளை பின்னணியாக கொண்ட பல படங்களில் வடிவேலு தொடர்ந்து நடித்தார். விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கந்தா கடம்பா கதிர்வேலா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என அடுத்தடுத்து நடத்த இவர் வரவு எட்டணா செலவு பத்தணா படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார். இவர் வரும் காட்சிகளை நகைச்சுவையாக கொண்டு போயிருந்தாலும் மிடில் கிளாஸில் இருக்கும் குடும்ப தலைவனின் புலம்பல்களை எடுத்துரைத்திருப்பார்.
Also Read:மாமன்னனில் வடிவேலு, உதயநிதி ரத்த சொந்தமா? இணையத்தில் கசிந்த மொத்த கதை