புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எம்ஜிஆரை வில்லனாக மிரட்டி விட்ட நம்பியாரின் 7 படங்கள்.. ஜமீன்தாராக சூழ்ச்சி செய்த படகோட்டி

தமிழ் சினிமாவில் ஆரம்பகட்ட கால கட்டங்களில் வில்லன் கதாபாத்திரம் என்றால் இவர்தான் என்ற அளவிற்கு, மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர்தான் வில்லன் நடிகர் நம்பியார். அதிலும் எம்ஜிஆர் உடன்  இணைந்து தனது கொடூர  வில்லத்தனத்தின் மூலம், பார்ப்பவர்களை மிரளவிடும் அளவிற்கு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். இப்படியாக இவரது வில்லத்தனத்தில் வெளிவந்த 7 சூப்பர் ஹிட் படங்களை இங்கு காணலாம்.  

எங்க வீட்டுப் பிள்ளை: சாணக்யா இயக்கத்தில் உருவான திரைப்படம் எங்க வீட்டுப்பிள்ளை. இதில் எம்ஜிஆர், ஆர்.நம்பியார், சரோஜாதேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் எம்ஜிஆர் உடைய மாமாவாக கஜேந்திரன் என்னும் கதாபாத்திரத்தில்,  மனைவியை கொடுமை செய்யும் வில்லனாக மிரட்டி இருப்பார்.

Also Read: எம்ஜிஆர் உடன் அதிக முறை ஜோடி போட்ட ஒரே நடிகை.. மொத்தமாக நடித்த 85 படங்களில் 80 படம் ஹிட்

ஆயிரத்தில் ஒருவன்: இயக்குனர் பி ஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இதில் எம்ஜிஆர் உடன் ஜெயலலிதா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இப்படத்தில் நம்பியார் கடல் கொள்ளையனாக எம்ஜிஆரின் மனைவியை அடையத் துடிக்கும் கொடூரனாக நடித்துள்ளார்.

நாடோடி மன்னன்: இயக்குனர் ம.கே ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நாடோடி மன்னன். இதில் எம்ஜிஆர் உடன் பானுமதி, சரோஜாதேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நம்பியார், பிங்காலன் என்னும் கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் உடன் கத்தி சண்டை இட்டு தனது வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். 

நாளை நமதே: இயக்குனர் கே எஸ் சேதுராமன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நாளை நமதே. இதில் எம்ஜிஆர் உடன் லதா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்படத்தில் நம்பியார், ரஞ்சித் என்னும் கதாபாத்திரத்தில் கொலை குற்றவாளியாக தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

Also Read: ஒரே பாட்டை வைத்து கலாய்த்து தள்ளிய எம்ஜிஆர், நம்பியார்.. சிவாஜி கணேசனுக்கு கொடுத்த ஓவர் டார்ச்சர்

காவல்காரன்: இயக்குனர் பி  நீலகண்டன் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காவல்காரன். இதில் எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவக்குமார், நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நம்பியார்  ஜெயலலிதாவின் தந்தையாக, மருதாசலம் என்னும் கதாபத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் மகளின் காதலுக்கு எதிராக பல்வேறு வில்லத்தனங்களில் ஈடுபடும் தந்தையாக நடித்து அசத்தியிருப்பார்.

குடியிருந்த கோவில்: இயக்குனர் கே சங்கர் இயக்கத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் குடியிருந்த கோயில். இதில் எம்ஜிஆர் உடன் ஜெயலலிதா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் இப்படத்தில் நம்பியார், பூபதி என்னும் கதாபாத்திரத்தில்  கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளைக்காரன் ஆக நடித்துள்ளார்.

படகோட்டி: இயக்குனர் டி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் உருவான திரைப்படம் படகோட்டி. இதில் எம்ஜிஆர்-க்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்துள்ளார். இப்படம் இரண்டு மீனவ குழுக்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து வெளிவந்ததாகும். அதிலும் நம்பியார் இவர்களிடையே சண்டையை மூட்டி விடும் வஞ்சகம் நிறைந்த ஜமீன்தாராக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

Also Read: 70களில் கவர்ச்சியில் திணறடித்த 5 நடிகைகள்.. எம்ஜிஆர் உடன் மஞ்சுளா அடித்த அந்தரங்க லூட்டி 

Trending News