ரஜினியை சுற்றி வளைக்கும் 7 தயாரிப்பாளர்கள்.. நண்பனுக்காக யோசிக்கும் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வரும் ரஜினி இதை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்திலும் நடிக்கிறார்.

இதுவே பரபரப்பை கிளப்பிய நிலையில் அவருடைய அடுத்த பட அறிவிப்பும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படி அவர் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

Also read: ரஜினி இந்த படத்தை தான் தன்னுடைய கடைசி படம் என நினைத்தார்.. உண்மையை சொன்ன இயக்குனர்

இந்நிலையில் தலைவர் 171 திரைப்படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்ற போட்டி இப்போது ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் 7 தயாரிப்பாளர்கள் சூப்பர் ஸ்டாரை சுற்றி வளைத்துள்ளார்களாம். அதில் லைக்கா, சன் பிக்சர்ஸ் ஆகியவை போட்டிக்கு வந்த நிலையில் நானும் இருக்கிறேன் என்று உலக நாயகனும் களத்தில் குதித்து இருக்கிறாராம்.

ஏற்கனவே ராஜ்கமல் நிறுவனம் ரஜினியை வைத்து படம் எடுக்க முயற்சி செய்தது. ஆனால் மகேந்திரன் அதில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ரஜினி அந்த யோசனையை கைவிட்டார். ஆனால் இப்போது கமல் அடுத்தடுத்த தயாரிப்புகளில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்.

Also read: இதனால் தான் விஜயகாந்திற்கு அப்பாவாக நடித்தேன்.. மனம் நொந்து பேசிய பிரபலம்

அதனாலேயே நண்பனுக்காக இதை செய்யலாம் என்று சூப்பர் ஸ்டார் முடிவெடுத்துள்ளாராம். இதற்கு பின்னால் மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது கமல், ரஜினியை நேரில் சந்தித்து மகேந்திரனின் பொறுப்பு என்ன என்பதையும், ராஜ்கமல் நிறுவனத்தில் அவருடைய பங்கு என்ன என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளாராம்.

அதன் பிறகே சூப்பர் ஸ்டார் ஓரளவு சமாதானம் அடைந்து நண்பனுடன் கைகோர்க்க சம்மதித்துள்ளாராம். அந்த வகையில் அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று பெரிய பெரிய நிறுவனம் முயற்சி செய்து வந்தாலும் கமலுக்கு தான் இப்போது யோகம் அடித்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.

Also read: ஆள காணோம்னு தேடக்கூடிய நிலையில் இருக்கும் 6 நடிகர்கள்.. பிக் பாஸுக்கு பின் காணாமல் போன வையாபுரி