சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

7 முறை தேசிய விருதை தட்டி பறித்த வைரமுத்து.. எந்தெந்த பாடல்களுக்கு தெரியுமா?

Lyricist Vairamuthu: ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்னும் வரிகளின் மூலம் தமிழ் சினிமாவின் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர்தான் கவிப்பேரரசு வைரமுத்து. தமிழ் சினிமாவில் ஐந்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதிவிட்ட வைரமுத்து இதுவரை மொத்தம் ஏழு பாடல்களுக்கு தேசிய விருது வாங்கி இருக்கிறார். அதில் 5 இசை புயல் ஏ ஆர் ரகுமானின் இசையில் இவர் எழுதியது. கவிப்பேரரசு எந்தெந்த பாடல்களுக்கு தேசிய விருது வாங்கினார் என்பதை பார்க்கலாம்.

முதல் மரியாதை: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் முதல் மரியாதை. ஒரு ஊரே போற்றும் பெரிய மனிதனாக இருக்கும் சிவாஜி, தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருப்பதே பூங்காற்று திரும்புமா என்னும் பாடலின் மூலம் சொல்லி இருப்பார் வைரமுத்து. ‘ மெத்தை வாங்கினேன், தூக்கத்தை வாங்கவில்லை’ போன்ற வரிகள் இன்று வரை இந்த பாடலை கேட்பவர்களை கலங்க வைக்கும்.

Also Read:வைரமுத்துவை ஒப்பிட்டு பேசிய சூப்பர் ஸ்டார்.. மேடையில் கடித்து குதறிய சம்பவம்

கருத்தம்மா: 1994 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் கருத்தம்மா. பெண் சிசுக்கொலை பற்றி அந்த காலத்திலேயே தைரியமாக எடுத்துச் சொன்ன படம் இது. இதில் ‘போராளே பொன்னுத்தாயி’ என்று ஸ்வர்ணலதா தன்னுடைய இதமான குரலில் சோகத்தை கொட்டிய பாடல் தேசிய விருது வென்றது.

ரோஜா: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் இசை புயல் ஏ ஆர் ரகுமானுக்கு முதல் படம் ஆகும். கிராமத்தில் வசிக்கும் துருதுறு வென்று இருக்கும் இளம் பெண் தன்னுடைய ஆசைகளை சொல்லும் பாடல் தான் ‘சின்ன சின்ன ஆசை’. இந்த பாடலும் தேசிய விருது வென்றது.

கன்னத்தில் முத்தமிட்டால்: ஒரு குழந்தையின் மூலம் இலங்கையின் இன பிரச்சனையை இயக்குனர் மணிரத்தினம் சொன்ன திரைப்படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். இதில் “வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும்”என்னும் பாடல் வரிகள் வைரமுத்துவால் எழுதப்பட்டது. இந்த பாடலுக்காக வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

Also Read:ஏஆர் ரகுமானை மேடையில் அசிங்கப்படுத்திய 3 பிரபலங்கள்.. திருப்பி வச்சு செய்த இசை புயல்

சங்கமம்: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சங்கமம். இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்துமே செம ஹிட் அடித்தன. இதில் வரும் ‘முதல் முறை கிள்ளி பார்த்தேன்’ பாடலுக்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

தென்மேற்குப் பருவக்காற்று: இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக ஹீரோவாக நடித்த படம் தான் தென்மேற்கு பருவக்காற்று. இந்த படம் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த படம், சிறந்த நடிகை மற்றும் சிறந்த பாடலாசிரியருக்காக தேசிய விருது பெற்றது. வைரமுத்து எழுதிய’ கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்னும் பாடல் இன்றுவரை கேட்பவர்களை கலங்க வைக்கும்.

பவித்ரா: நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடித்து, நடிகை ராதிகா முக்கியமான கேரக்டரில் நடித்த திரைப்படம் பவித்ரா. இந்த படத்தில் வரும் உயிரும் நீயே என்னும் பாடலுக்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த பாடல் நடிகர் அஜித்குமாருக்கு ரொம்பவும் பிடித்த பாடல் என்று கூட சமீபத்தில் ஷாலினி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

Also Read:ஐம்பூதங்களையும் ஒரே படத்தில் இசையமைத்துக் கொடுத்த ஏஆர் ரகுமான்.. 5 பாட்டுமே செம ஹிட்

Trending News