வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

2023 ஓடிடி-இல் வெற்றி பெற்ற 7 படங்கள்.. கமுக்கமாக வந்து நச்சென்று கதையை கொடுத்த சித்தா!

7 Successful Moives On OTT in 2023: பொழுதுபோக்கிற்காக படங்களை பார்த்து வந்த காலம் தாண்டி, தினமும் ஒரு படத்தையாவது பார்த்து விட்டு தூங்கினால் தான் ரிலாக்ஸ் ஆக இருக்கும் என்கிற நிலைமைக்கு மாறிவிட்டது. அதற்கு ஏற்ற மாதிரி திரையரங்குகளில் போய் தான் படங்களை பார்க்க வேண்டும் என்கிற கட்டாயமும் தற்போது இல்லை.  புது புது படங்களை ஓடிடி மூலமாகவும் பார்த்து மக்கள் என்ஜாய் பண்ணுகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஓடிடி-யில் அதிகமாக பார்க்கப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்த வெற்றி படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

இதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ஜாதி மற்றும் அரசியல் சம்பந்தமான விஷயங்களை முன்னுறுத்தி காட்டிய படம் தான் மாமன்னன். இப்படம் netflix தளத்தில் ஜூலை 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படம் திரையரங்குகளில் வெளியானதை விட ஓடிடி-யில் வெற்றி பெற்றுள்ளது. நெட்பிளக்சில் இந்தியாவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் இது உலக அளவில் 1.2 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.

அடுத்ததாக அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சித்தா. இப்படம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை வெளிச்சம் போட்டு காட்டும் படமாக மக்களிடம் வெற்றி பெற்றது. இப்படத்தை ஓடிடி-யில் நவம்பர் 28ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. மேலும் இப்படம் எந்தவித அலப்பறையும் காட்டாமல் கமுக்கமாக வந்து மக்கள் மனதில் நச்சென்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

Also read: சித்தாவை பல கோடி கொடுத்து வாங்கிய விஜய் டிவி.. ஓடிடியில் கல்லா கட்ட ரிலீஸ் எப்போது தெரியுமா?

இதனை அடுத்து விக்ரம் பிரபு, விதார்த் நடிப்பில் வெளிவந்த இறுகப்பற்று திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதனால் தியேட்டரில் மட்டுமல்லாமல் netflix தளத்தில் நவம்பர் 6 ரிலீஸ் ஆகி மக்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டது. கவின் நடிப்பில் வெளிவந்த டாடா படம் அமேசான் பிரைம் வீடியோவில் மார்ச் 10ம் தேதி வெளியிடப்பட்டது. இப்படம் அதிக பார்வையாளர்களை கவர்ந்து ஓடிடி-யில் வெற்றி பெற்ற படங்களில் இடம் பிடித்திருக்கிறது.

அடுத்ததாக வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கொன்றால் பாவம் அமேசான் பிரைம் வீடியோவில்  ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படம் அதிகமான பார்வையாளர்களை கடந்து ஓடிடி-யில் வெற்றி பெற்றுவிட்டது. இதனை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த ரன் பேபி ரன் நேர்மையான விமர்சனங்களையும் வணிக ரீதியான விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், மார்ச் 10ஆம் தேதி வெளியிட்டு அதிலும் அதிக பார்வையிடர்களை கவர்ந்திருக்கிறது.

அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை தியேட்டரில் மக்கள் பார்த்து நேர்மையான விமர்சனங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அத்துடன் இப்படத்தை ஓடிடி-யில் ZEE5 இல் மார்ச் 3 ஆம் தேதி வெளியிட்டு அதிகமாக பார்வையாளர்களை கவர்ந்து வெற்றி பெற்று இருக்கிறது.

Also read: கடவுள் மாதிரி வந்து காப்பாற்றிய மாரி செல்வராஜ்.. மக்களை மீட்டெடுத்த மாமன்னன் வீடியோ

Trending News