செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நீதிமன்றத்தில் போராடி வெற்றி கண்ட 7 படங்கள்.. சர்ச்சையிலும் பிளாக்பஸ்டர் அடித்த சூர்யா

தமிழ் சினிமாவில் காதல், ஆக்ஷன், ஹாரர் என்று பலவிதமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் நீதிமன்ற காட்சிகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதிலும் முன்னணி ஹீரோக்கள் வக்கீலாக இருந்து வாதாடுவது போன்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருக்கிறார்கள். அப்படி நம் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற சில வழக்கு சம்பந்தப்பட்ட திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

ஜெய்பீம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு அரசியல் ரீதியாக பல தொல்லைகள் ஏற்பட்டது.

இருப்பினும் அதை எல்லாம் தாண்டி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அந்த வகையில் சமூக கருத்துக்களை கொண்ட படங்களில் நடித்து வரும் சூர்யா இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றார்.

நேர்கொண்ட பார்வை வினோத் இயக்கத்தில் அஜீத் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்திருந்த இந்த திரைப்படம் ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இதில் அஜித் குற்ற வழக்கில் சிக்கிக் கொள்ளும் 3 பெண்களை காப்பாற்றும் வக்கீலாக நடித்திருப்பார். நீதிமன்றத்தில் அவர் பேசும் வசனங்களும் காட்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றது.

மனிதன் அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் ஒரு கொலை வழக்கு சம்பந்தப்பட்ட திரைப்படமாகும். இதில் உதயநிதி ஒரு முக்கிய கேசை கையிலெடுத்து வாதாடி வெற்றி பெறுவார். அவரின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழன் தளபதி விஜய்யின் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படத்தில் உலக அழகி பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார். சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு எதிராக வாதாடும் கேரக்டரில் விஜய் நடித்து இருப்பார். விஜய்யின் நடிப்பில் வெளியான பல படங்களில் இந்த திரைப்படமும் ஒரு முக்கிய படமாக அவருக்கு இருக்கிறது.

விதி மோகன், பூர்ணிமா பாக்யராஜ், சுஜாதா, ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. காதலித்து ஏமாற்றிய மோகனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பூர்ணிமா நீதிமன்றத்தை தேடி செல்வது தான் இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் 500 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்தது.

பொன்மகள் வந்தாள் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் ஜோதிகா வக்கீலாக நடித்திருப்பார். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஒரு வெற்றி படமாக அமைந்தது.

தெய்வத் திருமகள் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் அவருக்கு ஒரு முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதில் அவருடன் இணைந்து அனுஷ்கா, அமலாபால், சாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சாரா சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றார். ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending News