வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

எந்த கதாபாத்திரம் நாளும் வாழ்ந்து காட்டிய 7 நடிகர்கள்.. எம்எஸ் பாஸ்கரை ஓவர்டேக் செய்த நடிகர்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது சினிமா பேட்டை வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமாக் கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு எந்த ரோல் கொடுத்தாலும் அதனை சிறப்பாக செய்யும் ஆற்றல் பெற்ற சிறந்த நடிகர்கள். வாருங்கள் லிஸ்டை பார்க்கலாம். தற்போது வரும் படங்களில் எம்எஸ் பாஸ்கரை மிஞ்சும் அளவுக்கு குரு சோமசுந்தரம் மிக அற்புதமாக நடித்து வருகிறார்.

நாசர்: வில்லனாக அறிமுகம் ஆன நாசர், நடிகர் கமல்ஹாசனின் பாசறையில் நிச்சயம் இடம் பிடிப்பவர். இவர் நடித்த தேவர் மகன் படத்தில் அந்த வில்லன் வேடத்தை வேறு யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது. அந்த அளவுக்கு கனமான பாத்திரம். மேலும் அவர் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை எம்டன் மகன் படத்திலும் நிரூபித்து இருந்தார். அவ்வை ஷண்முகி படத்தில் பாஷா என்னும் ரோலில் நகைச்சுவையும் புகுந்து விளையாடி இருப்பார்.

பிரகாஷ்ராஜ்: தமிழ்த்திரை உலகிற்கு கே. பாலச்சந்தர் அவர்கள் பல திறமையான நடிகர்களை அறிமுகம் செய்துள்ளார். அந்த வகையில் மிகவும் திறமையான வில்லனாக, குணசித்திர நடிகராக வந்தவர் பிரகாஷ்ராஜ். ஆரம்பத்தில் வில்லன் வேடம் மட்டும் செய்துகொண்டு இருந்தவர், பின்னாளில் ஹீரோ, கவுரவ தோற்றம், குணசித்திரவேடம், நகைச்சுவை வேடம் என்று அனைத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். இவர் நடித்த அபியும் நானும் அப்பா கதாபாத்திரம் இன்றளவும் சிறப்பான ஒரு படைப்பாகும். அது போல காஞ்சிவரம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது வாங்கினார்.

எம்.எஸ். பாஸ்கர்: பாஸ்கர் அவர்கள் பல வருடங்கள் திரைத்துறையில் டப்பிங் கலைஞராக இருந்தார். அவர் புகழ்பெற்றது சன் டிவியில் ஒளிபரப்பான சின்னப்பாப்பா, பெரியப்பாப்பா நாடகத்தின் மூலமாக. அதன் பிறகு திரைப்படங்களில் நடித்தவருக்கு ரஜினி, கமல் என்று முன்னணி நடிகர்களின் படங்கள் கிடைத்தன. அதிலும் கமலுடன் இவர் நடித்த, தசாவதாரம், உத்தம வில்லன் ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பை பார்த்து கமலே பாராட்டிவிட்டார். மேலும் 8 தோட்டாக்கள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தின் கதை நாயகனும் இவர்தான் என்றால் அது மிகை அல்ல.

டெல்லி கணேஷ்: ஆரம்பத்தில் கதாநாயகனாக இருந்த டெல்லி கணேஷ், பின்னர் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்தார். கமலுடன் நாயகனின் அய்யர் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அந்த நட்பு அவரை கமலின் முக்கிய திரைப்படங்களில் எல்லாம் இடம் பெற செய்தது. அவ்வை ஷண்முகி படத்திலும், மைக்கல் மதனகாமராஜன் படத்திலும் தனக்கு காமெடியும் வரும் என்பதை உணர்த்தினார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவரும் ஒரு வில்லனாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு சோமசுந்தரம்: தமிழ் சினிமாவிற்கு தாமதமாக கிடைத்த ஒரு நடிகர் என்றால் அது குரு சோமசுந்தரம் தான். தியாகராஜா குமாராராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ஆரண்ய காண்டம் படத்தில் அப்பாவி தந்தையாக நடித்திருப்பார் பாருங்கள். அருமையோ அருமை. பின்னர் ஜிகர்தண்டா, குற்றமே தண்டனை, மின்னல் முரளி போன்ற படங்களில் சிறப்பு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் அவரது பெஸ்ட் என்றால் அது ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜோக்கர் படம் தான். இதில் வரும் அந்த அப்பாவி பிரதமர் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட இயலாது.

பசுபதி: கமல்ஹாசன் நன்மதிப்பை பெற்றவர்கள் யாரும் திறமையான ஆட்களாய் தான் இருப்பார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் பசுபதி. விருமாண்டி படத்தில் கொத்தாள தேவராக மிரட்டி இருப்பார். வெயில் படத்தில் பரத்தின் அண்ணனாக சிறப்பாக நடித்திருப்பார். ஒரு சில கமெர்ஷியல் படங்களில் வில்லனாகவும், பல திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும் சிறப்பாக நடித்திருப்பார். இயற்கை படத்தில் சர்ச் பாதராக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சமுத்திரக்கனி: சமுத்திரக்கனியையும், சமூக அக்கறையையும் தனியாக பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு தனது படங்களில் சமூக நலன் பற்றி பேசாமல் இருக்க மாட்டார். ஆனாலும் சில படங்களில் அவர் வில்லன் வேடம் நடிக்கவும் தவறவில்லை. வடசென்னை படத்தில் வில்லனாக அசத்தி இருப்பார். அது போலவே சுப்ரமணியபுரம் படத்திலும். அதோடு, தந்தை வேடத்தில் சிறப்பாக நடிக்க இவரை விட்டால் ஆள் இல்லை என்னும் அளவுக்கு சிறப்பான பெயரை பெற்றுள்ளார். என்ன இருந்தாலும் இவரது இயக்கத்தை மிஸ் செய்பவர்கள் உண்டு.

- Advertisement -spot_img

Trending News