திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

நடிகையின் உதட்டை கடித்ததால் ஃபேமஸான 6 நடிகர்கள்.. அட நம்ம மாமன்னன் வடிவேலு இதுல இருக்காரா

Lip lock scenes: தமிழ் சினிமாவில் அப்போது தொடங்கி, இந்த காலம் கட்டம் வரை ஒரு நடிகர் அல்லது நடிகை லிப் லாக் காட்சியில் நடித்தால் அது மிகப் பெரிய அளவில் பேசப்படும். இது போன்ற காட்சிகளுக்கு பல தொழில்நுட்பங்கள் உபயோகப்படுத்தப்பட்டாலும், சில நேரங்களில் காட்சிகள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படியே எடுப்பதும் உண்டு. இது போன்ற காட்சிகளுக்காக அதிக சம்பளம் கேட்கும் நடிகைகளும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். இந்த 7 நடிகர்கள் லிப்லாக் காட்சியின் மூலம் பயங்கர வைரல் ஆகியவர்கள்.

சிம்பு: நடிகர் சிம்பு தன் சொந்த இயக்கத்தில் நடித்த ஒரு சில படங்களில் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் கொஞ்சம் முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கும். அதிலும் வல்லவன் படத்தில் நயன்தாரா மற்றும் சிம்புவின் காட்சிகள் ரொம்ப ஓவராக இருக்கும். இதற்கு காரணம் இவர்கள் இருவருமே அப்போது காதலில் இருந்தது தான். இந்த படத்தில் வரும் லிப்லாக் காட்சி இன்றுவரை இணையதளத்தில் வைரல்தான்.

Also Read:மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு கேரக்டரில் நடிக்க இருந்த பிரபலம்.. மொத்த பிளானையும் மாற்றிய உதயநிதி

ஜிவி பிரகாஷ்: இசையமைப்பாளராக மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜிவி பிரகாஷ் சினிமாவிற்குள் ஹீரோவாக நுழைந்ததிலிருந்து ஒரு சில படங்களைத் தவிர எல்லா படங்களிலும் ஹீரோயின்களுடன் ரொம்பவும் நெருக்கமான காட்சிகளிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே இவருடைய பெயரும் சினிமாவில் கெட்டுப் போய்விட்டது என்று கூட சொல்லலாம். திரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சிலர், ஜெயில் போன்ற படங்களில் இவர் நடித்த லிப்லாக் காட்சி பயங்கர வைரலானது.

கௌதம் கார்த்தி: கிட்டத்தட்ட நடிகை ஜிவி பிரகாஷின் லிஸ்டில் இருப்பவர் தான் கௌதம் கார்த்திக். இவர் நடித்த நிறைய படங்களை குடும்பத்தோடு பார்க்க முடியாது என்ற நிலைமையில் தான் இருக்கும். முதன் முதலில் இயக்குனர் மணிரத்தினத்தின் கடல் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவருக்கு அந்த படத்திலேயே நடிகை துளசியுடன் லிப்லாக் காட்சி இருக்கும்.

விஷால்: நடிகர் விஷால் முதன்முறையாக லட்சுமிமேனன் உடன் இணைந்து நடித்த பாண்டியநாடு திரைப்படத்தில் இவர்கள் இருவருக்கும் அவ்வளவாக காதல் காட்சிகள் இருக்காது. ஆனால் அந்த படத்தை தொடர்ந்து நடித்த நான் சிகப்பு மனிதனின் இருவருக்கும் அதிகமான நெருக்கமான காட்சிகள் இருக்கும். அதில் லிப் லாக் காட்சியும் ஒன்று.

Also Read:2 வாரத்தைக் கடந்தும் மவுசு குறையாத மாமன்னன்.. ஒட்டுமொத்தமாக இத்தனை கோடியா.!

விஜய்: நடிகர் விஜய் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் நடித்த குஷி திரைப்படத்தில் நடிகை மும்தாஜ் உடன் ஆடும் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடலே இன்று வரை பயங்கர சர்ச்சையில் தான் இருக்கிறது. மேலும் படத்தின் கிளைமாக்ஸ் சீனில் நடிகை ஜோதிகாவுடன் வரும் லிப் லாக் காட்சி அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

சூர்யா: விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் அடித்தது. இந்த படம் இன்று வரை 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது. இதில் நடிகை விஜயலட்சுமிக்கும் , சூர்யாவுக்கும் ஒரு லிப்லாக் காட்சி இருக்கும்.

வடிவேலு: ஒரு காமெடி நடிகருக்கு லிப்லாக் காட்சி வைக்கப்பட்டது என்றால் அது நடிகர் வடிவேலுக்காக தான் இருக்கும். நீ எந்தன் வானம் என்னும் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகை ஒருவருக்கு வடிவேலு லிப் லாக் கொடுப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

Also Read:படத்தைப் பார்த்துவிட்டு காரி துப்பினால் அந்தப் படம் தான் ஹிட்.. கீழ், மேல் என உதயநிதியை சீண்டிய அண்ணாச்சி

- Advertisement -

Trending News