ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வெற்றி படங்களை மிஸ் பண்ணிய 7 நடிகைகள்.. அலைபாயுதே படத்தில் நடிக்க வேண்டியது இந்த ஹீரோயினா!

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோயின்கள் நிறைய வெற்றி படங்களை கால்ஷீட் இல்லாத காரணத்தாலும், அல்லது தங்களுடைய சொந்த காரணத்தினாலும் மறுத்திருக்கிறார்கள். அதில் ஒரு சில படங்கள் அவர்கள் வாழ்க்கையே புரட்டிப் போட வேண்டியதாய் கூட இருந்திருக்கும். அதுபோன்ற படங்களை இழந்த பிறகு தான் அவர்களுக்கு அந்த கேரக்டரின் முக்கியத்துவம் புரியும். அப்படி சில முன்னணி ஹீரோயின்கள் முக்கியமான இந்த ஏழு படங்களை தவறவிட்டு இருக்கிறார்கள்.

மஞ்சுவாரியர்: நடிகை மஞ்சு வாரியர் கேரள சினிமா உலகின் முன்னணி ஹீரோயின் ஆவார். இவர் நேரடி தமிழ் படத்தில் முதன் முதலில் நடித்தது அசுரன் தான். அந்த படத்தில் தென் மாவட்டத்தில் வாழும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவருக்கு விஜய் சேதுபதி உடன் 96 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்துவிட்டார். ஆனால் அந்த ஜானு கேரக்டர் இன்றுவரை ரசிகர்கள் மனதில் ஆழமாக நின்று விட்டது.

Also Read:பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

காதல் சந்தியா: சந்தியா நடிகர் பரத்துடன் காதல் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பின்னர் டிஷ்யூம், வல்லவன் போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும் சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சந்தியாவிற்கு சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். ஒருவேளை அந்த படத்தில் நடித்திருந்தால் அவருடைய சினிமா கேரியர் தலைகீழாக மாறி இருக்க வாய்ப்பு இருக்கிறது.

சினேகா: புன்னகை அரசி என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை சினேகா. இவர்கிட்ட தட்ட தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் சினேகாவுக்கு அந்த படம் மிஸ் ஆகிவிட்டது.

வசுந்தரா தாஸ்: நடிகை வசுந்தரா தாஸ் சினிமாவில் பின்னணிப் பாடகியாக வந்து பின்னர் ஹீரோயின் ஆனவர். நடிகர் அஜித்குமாரின் சிட்டிசன் திரைப்படத்தில் இவர் ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார். மணிரத்னத்தின் சிறந்த படங்களில் ஒன்றான அலைபாயுதே திரைப்படத்தில் ஹீரோயின் கேரக்டரில் நடிப்பதற்கு வசுந்தராவிற்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை.

Also Read:திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்

சமந்தா: நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் கதாநாயகியாக இருக்கிறார். தனிக் கதாநாயகியாக நடிக்கும் இவருடைய படங்களுக்கு முன்னணி ஹீரோக்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் வரவேற்பு இருக்கிறது. சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் முதலில் சமந்தா தான் நடிப்பதாக இருந்திருக்கிறது. அதன்பிறகு தான் எமி ஜாக்சன் அந்த படத்தில் நடித்தார்.

தேவயானி: நடிகை தேவயானி எந்தவித ஒப்பனையும் இல்லாத வசீகரமான தோற்றம் கொண்டவர். சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் பொழுது கூட எந்த ஒரு பட வாய்ப்புக்காகவும் கிளாமராக இவர் நடித்ததே கிடையாது. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படமான படையப்பா திரைப்படத்தில் சௌந்தர்யா கேரக்டரில் முதலில் தேவயானி தான் நடிப்பதாக இருந்திருக்கிறது.

அனுஷ்கா: பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படம் பண்ணப் போகிறார் என்று அறிவிப்பு வெளியாகும் போது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஹீரோயின் அனுஷ்கா தான். அதேபோன்று அனுஷ்காவுக்கும் அந்த படத்தில் நந்தினியாக நடிப்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அனுஷ்கா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அதேபோன்றுதான் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் குந்தவையாக நடிக்கும் வாய்ப்பு தேடிச் சென்றும் அந்த கேரக்டரின் வலிமை புரியாமல் அவர் அதை மறுத்து விட்டார்.

Also Read:காதலருடன் லிப்லாக்கில் மூழ்கிக் கிடந்த நடிகை.. நைட் பார்ட்டியில் அரங்கேறிய கூத்து

Trending News