Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

70 வயதிலும் கோடிகளில் சம்பளம் வாங்கும் 5 சப்போர்ட் நடிகர்கள்.. ராஜ்கிரன், கட்டப்பா கல்லாவுக்கு வரும் தொகை

70 வயதிலும் கோடிகளில் சம்பளம் வாங்கும் 5 சப்போர்ட் நடிகர்கள்.. ராஜ்கிரன், கட்டப்பா கல்லாவுக்கு வரும் தொகை

நடிகர்கள் பல பேர் இன்று வரை சினிமாவில் பீல்ட் அவுட் என்று சொல்லாத அளவிற்கு சம்பாதித்து வருகிறார்கள். அதிலும் 70 வயதில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஐந்து பேர் இன்று வரை சினிமாவில் அசத்தி வருகின்றனர். எந்த கதாபாத்திரம் […]

நடிகர்கள் பல பேர் இன்று வரை சினிமாவில் பீல்ட் அவுட் என்று சொல்லாத அளவிற்கு சம்பாதித்து வருகிறார்கள். அதிலும் 70 வயதில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஐந்து பேர் இன்று வரை சினிமாவில் அசத்தி வருகின்றனர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அடித்து நொறுக்கும் அந்த நடிகர்களின் சம்பளம் விபரம்

சத்யராஜ்: 50 வயதுக்கு மேல் தான் இவருக்கு அதிர்ஷ்டம். ஹீரோவாக நடிக்கும் பொழுது கூட இவருடைய சம்பளம் லட்சங்களில் தான் இருந்தது ஆனால் சப்போர்ட் கதாபாத்திரம் நடிக்கும் பொழுது இவர் வாங்கும் சம்பளம் பல கோடிகள். இப்பொழுது சத்யராஜுக்கு சம்பளம் 4 கோடிகள்.

ராஜ்கிரண்: இரண்டு கோடிகள் வரை கதாபாத்திரத்திற்கு ஏற்ப சம்பளம் வாங்குகிறார் ராஜ்கிரன். இரண்டாவது இன்னிங்ஸில் தான் இவர் பட்டையை கிளப்பி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் விருமன். இப்பொழுது வா வாத்தியாரே என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஜெயராம்: மலையாள நடிகர் என்றாலும் தமிழில் ஜெயராமுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்த ஜெயராமுக்கு சம்பளம் இரண்டு கோடிகள்.

கோவை சரளா: காமெடி மட்டும் இல்லை குணச்சித்திர கதாபாத்திரங்களும் இவருக்கு அத்துபடி. கொம்பன், காஞ்சனா என இன்றும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவரது சம்பளம் ஒரு கோடி.

நாசர்: மிஸ்டர் 360 நடிகர். குணசத்திரம், காமெடி வில்லன், ஹீரோ என சகலமும் இவருக்கு அத்துபடி. தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் காஞ்சுரிங் கண்ணப்பன். இப்பொழுது கமலின் தக்லைப் படத்தில் நடித்து வருகிறார். அனைத்து மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 1000 படங்கள் வரை இவர் நடித்துள்ளார். இவரின் சம்பளம் இரண்டு கோடிகள்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.