வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

70களில் கவர்ச்சியில் திணறடித்த 5 நடிகைகள்.. எம்ஜிஆர் உடன் மஞ்சுளா அடித்த அந்தரங்க லூட்டி

இப்போது இருக்கும் நடிகைகளின் கவர்ச்சி எல்லாம் கொஞ்சம் தான். ஆனால் பழைய படங்களில் கதாநாயகியாக நடிகர்களுடன் நெருங்கி நடிப்பது முதல் தங்களது உடைகளிலும் பேச்சு மற்றும் பார்வையினால் திரையரங்குகளில் ரசிகர்களை திணறடிக்கும் வகையில் கவர்ச்சியை அள்ளித் தெளிந்திருப்பார்கள். அதிலும் எம்ஜிஆர் உடன் மஞ்சுளா அடித்த அந்தரங்கள் லூட்டிக்கு அளவே இல்லை.

வைஜெயந்தி மாலா: ஏறத்தாழ 20 ஆண்டுகள் சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகை தான் வைஜெயந்திமாலா. இவர் நடிப்பில் வெளியான வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, சித்தூர் ராணி பத்மினி, தேன்நிலவு, மர்ம வீரன் போன்ற படங்களில் தனது வசீகர நடிப்பால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்தார். அதிலும் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்ஜிஆர் போன்ற முன்னணி நடிகர்களுடன் கவர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டினார்.

Also Read: எம்ஜிஆர், விஜய்க்கு அடுத்த வாரிசு நீங்கதான் என புகழ்ந்து தள்ளிய பிரபலம்.. ஓவர் புகழ்ச்சியால் புஷ்ன்ணு போன ஹீரோ!

ஜெயசித்ரா: 70, 80களில் தமிழ் தெலுங்கில் ரவுண்டு கட்டிய முன்னணி நடிகையான ஜெயசித்ரா. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டாலும் இவர் கே எஸ் கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் அறிமுகமாகி, அதன் பின் கே பாலச்சந்தரின் அரங்கேற்றம் படத்தில் அடையாளம் காணப்பட்டார். பிறகு சிவாஜி உடன் பாரத விலாஸ், கமலஹாசனின் சொல்லத்தான் நினைக்கிறேன், பணத்துக்காக, பட்டாம்பூச்சி போன்ற நிறைய படங்களில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவருடைய பார்வை பேச்சு அனைத்திலும் வசீகர கவர்ச்சி ததும்ப ததும்ப இருக்கும்.

மஞ்சுளா: தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் முதல் முதலாக 1969 ஆம் ஆண்டு வெளியான சாந்தி நிலையம் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன் பின் 1971 ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடன் ரிக்சாக்காரன் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அதிலும் எம்ஜிஆர் உடன் இதயக்கனி, உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன் என மொத்தம் 5 படங்களில் இணைந்து நெருக்கமாக நடித்திருப்பார். இவர் கொடுத்த நெருக்கத்தினாலேயே தொடர்ந்து எம்ஜிஆர் உடன் ஐந்து படங்களும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படங்களில் எல்லாம் இவர்கள் இருவரும் அடித்த அந்தரங்க லூட்டி திரையரங்கில் பார்ப்பதற்கே கண் கூசும் வகையில் இருக்கும்.

Also Read: அதிக வசூலை வாரி குவித்த எம்ஜிஆரின் முதல் படம்.. 70-களிலேயே வேட்டையாடிய கலெக்ஷன்

ராதா சாலுஜா: இவர் துவாரகா என்னும் ஹிந்தி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பார். அந்தப் படத்திற்கு பிறகு தான் அவர் ஹிந்தியில் உச்சம் பெற்றார். முதலில் 1975 ஆம் ஆண்டு வெளியான இதயக்கனி படத்தில் எம்ஜிஆர் உடன் ஜோடி சேர்ந்த ராதா சாலுஜா அந்தப் படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கவர்ச்சியை அள்ளித் தெளித்திருப்பார். ஆதலால் இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.

இதனால் எம்ஜிஆரின் கவர்ச்சி நாயகி என பெயர் போன ராதா சாலுஜா இரண்டு வருடம் கழித்து மீண்டும் 1979 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் ‘இன்று போய் என்றும் வாழ்க’ என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார். இப்படி இவர் 4 படங்களில்தான் தமிழில் நடித்து இருந்தார். இவர் ஹிந்தித் திரையுலகின் சில்க் ஸ்மிதா என்பது ஆக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷோபா: தட்டுங்கள் திறக்கட்டும் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அதன் பிறகு தனது 17 வது வயதில் பசி என்ற படத்தில் நடித்ததற்கான தேசிய விருதையும் பெற்ற பெருமைக்குரியவர். அதிலும் 70-களில் சில்க் ஸ்மிதாவுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டி ஏகப்பட்ட படங்களில் நடிகர்களுடன் நடித்துப் பெயர் போனவர்.

Also Read: கவர்ச்சிக்காகவே அந்த நடிகையை தேர்ந்தெடுத்த எம்ஜிஆர்.. தமிழ் சினிமா மறந்துப் போன முதல் சில்க்

இவ்வாறு இந்த 5 பிரபலங்களும் 70-களில் கவர்ச்சியில் திணறடித்த நடிகைகள் ஆவார்கள். அதிலும் எம்ஜிஆர் உடன் மஞ்சுளா அடித்த அந்தரங்க லூட்டி திரையரங்குகளில் ரசிகர்களை குதுகலப்படுத்தியது.

Trending News