70th National Award List: 2022க்கான 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழுக்கு எந்த பிரிவின் கீழ் எத்தனை விருதுகள் கிடைத்தது மற்ற மொழிகளுக்கு எத்தனை விருதுகள் கிடைத்தது என்பது பற்றி இங்கு விரிவாக காண்போம்.
அந்த வகையில் தமிழை பொருத்தவரையில் பொன்னியின் செல்வன் 1 சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருதை தட்டி தூக்கி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி இசைக்கான விருது ஏ ஆர் ரகுமானுக்கு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் இதுவரை அவர் ஏழு முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.
மேலும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ரவிவர்மாவுக்கும் சிறந்த ஒலி வடிவமைப்பு விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும் கிடைத்துள்ளது. இதன் மூலம் பொன்னியின் செல்வன் நான்கு விருதுகளை தட்டி தூக்கி இருக்கிறது.
2 விருதுகளைப் பெற்ற திருச்சிற்றம்பலம்
அதை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. அதன்படி சிறந்த நடிகையாக நித்யா மேனன் மற்றும் மேகம் கருக்காதா பாடலின் சிறந்த நடனத்திற்காக ஜானி மாஸ்டர், சதீஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அடுத்ததாக கே ஜி எஃப் 2 சிறந்த கன்னட திரைப்பட விருதை பெற்றுள்ளது. அதேபோல் சவுதி வெள்ளைக்கா சிறந்த கேரளா திரைப்பட விருதை பெற்றுள்ளது. மேலும் காந்தாரா படத்திற்காக சிறந்த நடிகர் விருதை ரிஷப் ஷெட்டி பெற்றுள்ளார்.
இப்படம் சிறந்த பொழுதுபோக்கு பிரிவின் கீழும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்திகேயா 2 சிறந்த தெலுங்கு திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி சிறந்த சண்டை பயிற்சியாளர்களாக கேஜிஎப் படத்திற்காக அன்பறிவு சகோதரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இப்படியாக தேசிய விருதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்து வருகிறது. அதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. அதேபோல் 500 கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
4 விருதுகளை தட்டி தூக்கிய பொன்னியின் செல்வன்
- ஏ ஆர் ரகுமானை டம்மியாக்கி அனிருத்தை தூக்கி விட்ட நபர்
- மணிரத்னத்தை விட அதிகம் சம்பாதிக்கும் சுஹாசினி
- கார்த்தி, ஜெயம் ரவி, விஷால் எல்லோரும் அவர்கிட்ட கத்துக்கணும்