வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

74 சீரியல் மட்டமான கதையை போட்டு உடைக்கும் பரிதாபங்கள்.. குடும்பத்தை காப்பாத்திக்கோங்க மக்களே

Serial: வீட்டில் வேலை பார்த்துட்டு அலுப்பாக இருக்கும் பெண்களுக்கு ஒரு பொழுதுபோக்கான விஷயம் தான் சின்னத்திரை மூலம் ஒளிபரப்பாகும் சீரியல்கள். ஆனால் ஆரம்பத்தில் வந்த சீரியல்கள் எல்லாம் சண்டை சச்சரவுகள் மட்டுமே காட்டப்பட்டு ஒரு குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஒற்றுமையாக எப்படி வாழ வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

ஆனால் போகப் போக ஒவ்வொரு சேனல்களுடன் போட்டி போட்டு முந்துவதற்காக புதுப்புது கதைகளுடன் பல சீரியல்களை கொண்டு வர ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் போன்ற சேனல்களில் கிட்டத்தட்ட 74 சீரியல்கள் போட்டி போட்டு வருகிறது.

சீரியல்களைப் பற்றி ஒரு துல்லியமான கணக்கெடுப்பு

இதனால் மக்களும் ஒரு சேனலில் நாடகம் நல்லா இல்லை என்றால் மற்றொரு சேனலில் உள்ள நாடகத்தை அந்த டைமில் பார்த்து நேரத்தை செலவழிக்கிறார்கள். அதே மாதிரி ஒரு நாடகத்தில் விளம்பரம் போட்டால் இன்னொரு நாடகத்தை பார்க்கும் படியாக மாற்றி மாற்றி அவர்களுடைய சேனலை மாற்றிக்கொண்டு தொடர்ந்து நாடகங்களை பார்த்து வருகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு சேனல்களிலும் அவர்களுடைய டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருவதால் மக்கள் எதை விரும்பிப் பார்க்கிறார்கள் என்று கணக்கெடுத்து அதற்கேற்ற மாதிரி கதைகளை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அப்படி சீரியல்களில் வரும் அந்தக் கதை பற்றி ஒரு வேடிக்கையான துல்லியமான கணக்கெடுப்பை பற்றி தற்போது பார்க்கலாம்.

தமிழில் மொத்தம் 74 சீரியல்கள், அதோட கதைகளை பார்த்தால் 20 சீரியல்களில் அடுத்தவன் பொண்டாட்டியை எப்படி கரெக்ட் பண்றார் என்று இருக்கும். 12 சீரியல்களில் மச்சினிச்சியை எப்படி மடக்குவது என்று வில்லங்கத்தனத்தை காட்டப்பட்டிருக்கும். அது மட்டுமல்ல இதுபோக 18 சீரியல்ல மாமியாவை எப்படி கொள்ளலாம் என்று பிளான் போட்டு சாகடித்து விடுவார்கள்.

அடுத்து இருக்கும் 24 சீரியல்களில் அடுத்தவன் குடும்பத்தை எப்படி கெடுக்கிறது என்று யோசித்துக் கொண்டே அவன் மட்டும் குழம்பியது இல்லாமல் சுற்றி இருப்பவர்களையும் நிம்மதியாக வாழ விடாமல் கெடுக்கிறதே வேலையாக இருக்கும்.

ஆக மொத்தத்தில் இந்த மாதிரி சீரியல்களால் குடும்பமே பரிதாபமாக நிற்கிறது. அதிலும் இந்த மாதிரி சீரியல்களை பார்த்து குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபத்தை காட்ட வேண்டியது. அதனால் இந்த மாதிரி சீரியல்களிடம் நம் ரொம்பவே தள்ளி நின்று உஷாராக இருக்க வேண்டும்.

Trending News