திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்.. ரமணா பாணியில் பிணத்தை வைத்து 75 ஆயிரம் கோடி மோசடி

Ramana Movie Style Corruption: ஊழல் இல்லாத ஒரு நாடை நாம் கனவிலும், திரைப்படத்திலும் தான் பார்க்க முடியும். அந்த அளவுக்கு இப்போது எங்கு திரும்பினாலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. அதிலும் தற்போது ரமணா பட பாணியில் பிணத்தை வைத்து 75 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்திருப்பது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆளும் கட்சியின் இந்த மோசடியை தற்போது சிஏஜி ஒரு அறிக்கை மூலமாக அம்பலப்படுத்தி இருக்கிறது. அதாவது ரமணா படத்தில் ஒரு பிணத்திற்கு நாள் முழுவதும் சிகிச்சை செய்கிறேன் என்ற பெயரில் விஜயகாந்திடம் இருந்து மருத்துவமனை நிர்வாகம் லட்சக்கணக்கில் பணத்தை ஆட்டையை போடும்.

Also read: பழக்க தோஷம் மாறல, தண்டவாளத்தில் ஏறிய அட்லியின் வண்டவாளம்.. விஜயகாந்தின் இந்த படம் தான் ஜவான்

அப்படி ஒரு விஷயம் தான் தற்போது நடந்திருக்கிறது. அதாவது குறிப்பிட்ட ஒரு தொலைபேசி எண்ணில் மட்டுமே 7.5 லட்சம் பயனாளிகளின் அட்டை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதைவிட அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் சிகிச்சை பலனின்றி இறந்த 88,670 நபர்களுக்கு புதிதாக சிகிச்சை அளித்தது போல் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலை ஊழல், டோல்கேட் ஊழல் என்று வெளிவரும் ஒவ்வொரு ஆதாரமும் பகீர் கிளப்பி இருக்கிறது. இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் கடுமையாக சாடி இருக்கிறார்.

Also read: மாந்திரீகத்தால் முடக்கப்பட்ட விஜயகாந்த்.. பரபரப்பான தகவலை கூறிய பிரபலம்

900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் மழைநீர் ஒழுகுகிறது. 2,700 கோடியில் கட்டப்பட்ட G20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது. இப்படி எங்கும் ஊழல் எதிலும் ஊழலுமாக இருக்கும் ஆளும் கட்சிக்கு எதிராக மக்களின் கோபம் திரும்பி உள்ளது. மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை தோற்கடிக்க போவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக பல திடுக்கிடும் தகவல்கள் ஆதாரங்களோடு சோசியல் மீடியாவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்கு பல கட்சிகளும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இதை பார்த்த பொதுமக்களும் பேரதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

Also read: விஜயகாந்தின் உடல் நிலைக்கு என்ன ஆச்சு.? அதிர்ச்சியை கிளப்பிய விஜய பிரபாகரன்

Trending News