ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஓவர் அழிச்சாட்டியம் பண்ணும் 8 நடிகர்கள்.. விஜயகாந்த் தலைமையில் நடக்கும் ஆறு மணி அவதாரம்

தமிழ் சினிமாவில் டாப் பிரபலங்களாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த எட்டு நடிகர்கள் செய்த ஓவர் அழிச்சாட்டியமும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் பார்ப்போம்

எஸ் எஸ் சந்திரன்: 15 வயதில் நடிக்க துவங்கிய இவர் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் சிவாஜி கணேசன் காலம் முதல் ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து  ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார். இவர் நடித்த படங்களில் எல்லாம் வித்தியாசமான நடிப்பை வெளிகாட்டியவர்.  அரசியலிலும் ஆர்வம் காட்டிய எஸ் எஸ் சந்திரன்,  புகழின் உச்சத்தில் இருக்கும் போது  மது உள்ளிட்ட ஒரு சில கெட்ட பழக்கத்தினால்  தன்னுடைய சினிமா வாய்ப்புகளை தொலைத்தார்.  

பாண்டியன்: 80 களில் மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் பாண்டியன், அதன் பிறகு தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார். இதனால் அவருடைய குரு இயக்குனர் பாரதிராஜாவினாலே அடுத்த  ரஜினி எனப் பாராட்டப்பட்டார். அதன் பின் அரசியலிலும் ஆர்வம் காட்டிய பாண்டியன் அங்கு கிடைத்த நட்பினால் குடிப்பழக்கம்  அவரை ஆட்கொண்டது.

சுமார் 80 படங்கள் வரை நடித்த பாண்டியன் அதன் பின் கதை சரியாக தேர்வு செய்யாமல், ஏனோ தானோ என்று கிடைத்த படங்களில் எல்லாம் நடித்து சினிமா வாழ்க்கையையும் கெடுத்துக் கொண்டார். பின் அரசியல் கட்சிகளும் அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்காமல் பிரச்சாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தி  விட்டு தூக்கி தூர போட்டு விட்டனர். இதனால் மனம் உடைந்த பாண்டியன் குடிக்க கூட காசு இல்லாத அளவுக்கு சென்றார். ஒரு கட்டத்தில் மஞ்சள் காமாலை வர, கல்லீரல்  பாதிப்படைந்து  பரிதாபமாக உயிரிழந்தார்.  

Also Read: இளம் வயதில் தமிழில் ஷகிலா கலக்கிய 4 படங்கள்.. வயதுக்கு வராமல் கவுண்டமணியை பரிதவிக்க விட்ட கவர்ச்சி புயல்

வாகை சந்திரசேகர்: 80களில் நடிகராக கலக்கிக் கொண்டிருந்த நடிகர்  சந்திரசேகர் அரசியலிலும் ஆர்வம் கொண்டவர். இவர்  குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி  தனக்கென இருந்த நல்ல பெயரை கொடுத்துக் கொண்டார். இதனால் அவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளும் வராமல் போனது.

ஜனகராஜ்: தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்த அதே சமயத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை வகுத்தவர் நடிகர் ஜனகராஜ். இவர் காமெடியனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும்  நடித்து அசத்தியவர். 80, 90களில் டாப் நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த  ஜனகராஜ் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். சினிமாவில் பேரும் புகழும் கிடைத்த பின்பு, ஒரு கட்டத்தில் ஓவர் குடி போதைக்கு அடிமையானார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் மறுபடியும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

ராதாரவி: எம்ஆர் ராதாவின் மகனான  ராதாரவி சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லனாக ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் அரசியலிலும் ஆர்வம் கொண்டவர். இவரிடம்  பிடிக்காத விஷயம் என்னவென்றால், மேடைப் பேச்சுக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கொஞ்சம் கூட நாவடக்கம் இல்லாமல்  பிரபலங்களை இஷ்டத்திற்கு வசை பாடுவார். இதனால்  அவர் பெரியவர் என தன்னையே காட்டிக் கொள்ள நினைக்கிறாரா! என்று தெரியவில்லை. ஆனால் அப்படியெல்லாம் பேசி, அவரது தரத்தை தாழ்த்திக் கொண்டார்.

Also Read: குடிக்கு அடிமையாகி மொத்தத்தையும் இழந்த மணிவண்ணன்.. அதிர்ச்சியான தகவலை பகிர்ந்த பிரபலம்

மணிவண்ணன்: இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்து, பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிவண்ணன். இவர் 400 படங்களுக்கு மேல் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர். இவர் தமிழ் சினிமாவின்  டாப் பிரபலமாக வலம் வந்த சமயத்தில் ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய  பேச்சுக்களை மேடையில் பேசி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இவர் கடவுள் மறுப்பாளராகவும், கம்யூனிச சித்தாந்தவாதியாகவும் திகழ்ந்தார். ஆகவே தான் அவரும் கலப்புத் திருமணம் செய்து கொண்டு,  அவரது பிள்ளைகளுக்கும் கலப்புத் திருமணம் செய்து வைத்தார். அதுமட்டுமல்ல இவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருடைய தனிப்பட்ட கருத்துக்களை  ரசிகர்களிடம் அழுத்தமாக பேசி அவ பெயரைப் பெற்றார்.

விஜயகாந்த்: அரசியலிலும் சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்திய கேப்டன் விஜயகாந்த், உச்ச நடிகராக இருந்த சமயத்தில்  ஒரு சில நல்ல விஷயங்களை செய்திருந்தாலும், ஏகப்பட்ட ரகளை செய்திருக்கிறார். இவர் செய்த அழுச்சாட்டியம் கொஞ்சம் நஞ்சமா! அந்த அளவிற்கு மது அருந்திவிட்டு பிரச்சார மேடைகளில் நாக்கை மடித்தும், கையை ஆட்டியும் கோபமாக பேசி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார்.

அதுமட்டுமல்ல நிதானத்தை இழக்கும் அளவிற்கு  மது அருந்திவிட்டு பொது நிகழ்ச்சிகளில் இஷ்டத்திற்கு வாய்க்கு வந்ததெல்லாம் உளறிக் கொட்டுவார். ஒருவேளை அவர் மட்டும் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் இப்போது  தமிழகத்தின் முதலமைச்சர் ஆக கூட மாறி இருந்திருக்கலாம். அதேபோல் சினிமாவிலும் கமல், ரஜினி போன்று கேப்டனும் இப்போது வரை ரவுண்டு கட்டி இருக்கலாம். ஆனால் அதெல்லாம்  நடக்காமல் போனது. அதற்கு பதில் அவருடைய தலைமையில் தொண்டர்களுடன் ஆறு மணி அவதாரம் எடுத்து, மது போதையில் குடியும் கும்மாளமுமாய்  ஆட்டம் போட்டார். அவருடைய கட்டுப்படுத்த முடியாத போதை பழக்கத்தினால், இப்போது உடல்நல குறைவுடன் வீழ் சேரில் கேப்டன் முடங்கிப் போனார்.

Also Read: ராமராஜனுக்கு டஃப் கொடுத்த பாண்டியனின் 5 சூப்பர் ஹிட் படங்கள்.. வி கே ராமசாமி பென்ட் எடுத்த ஆண்பாவம்

மணிவண்ணன் உதவியாளர் சீமான்: திரைப்பட இயக்குனர், நடிகர், அரசியல்வாதி என பல்வேறு பரிமாணங்களில் மக்களுக்கு பரிச்சையுமானவர் நடிகர் சீமான். இவர் நாம் தமிழர் இயக்கத்தை துவங்கி,  பல போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மேடைகளில் இவருடைய பேச்சுக்கள் அனைத்தும் அதிரடியாக தான் இருக்கும். யாருக்குமே மரியாதை கொடுக்க மாட்டார். நல்ல விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைப்பவர்.  மேலும் இளைஞர்களையும் வெகுண்டெல செய்து அரசியலில் ஈடுபட  வைக்க வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால் அடித்தொண்டையில் அதிரடியாக பேசுவதன் மூலம் இதையெல்லாம் சாதிக்க முடியும் என கண்மூடித்தனமாக நம்புகிறாரோ!  என பலரும் விமர்சிக்கின்றனர், 

இவர்கள் எல்லோரும் நெருங்கிய நண்பர்கள் 6 மணிக்கு மேலே இவர்கள் அனைவரும் சீட்டு விளையாட ஒன்று சேர்ந்து விடுவார்கள். இந்த எட்டு பேரில் விஜயகாந்த் தான் ஓவராக ஜாலி பண்ணுவாராம்.

Trending News