Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தனுசுக்கு வரிசைகட்டி நிற்கும் 8 படங்கள்.. அடித்து நொறுக்க போகும் மூன்று பார்ட் 2 படங்கள்

தனுசுக்கு வரிசைகட்டி நிற்கும் 8 படங்கள்.. அடித்து நொறுக்க போகும் மூன்று பார்ட் 2 படங்கள்

Dhanush : தனுஷ் இப்போது படு பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய குபேரா படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இதுதவிர எட்டு படங்கள் தனுஷ் கைவசம் இருக்கிறது. ஆகையால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தனுஷ் படம் அடுத்தடுத்து […]

Dhanush : தனுஷ் இப்போது படு பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய குபேரா படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இதுதவிர எட்டு படங்கள் தனுஷ் கைவசம் இருக்கிறது. ஆகையால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தனுஷ் படம் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

முதலாவதாக தனுஷே இயக்கி நடித்திருக்கும் படம் தான் இட்லி கடை. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. அடுத்ததாக போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது திரைத்துறையில் மிகுந்த மகிழ்ச்சி கொடுத்தது. மேலும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தனுஷ் கைவசம் உள்ள 8 படங்கள்

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் லப்பர் பந்து. இந்த படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து தனுசு உடன் கூட்டணி போட இருக்கிறார். அடுத்ததாக எல்லோரும் எதிர்பார்த்திருந்த வடசென்னை 2 படம் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.

வெற்றிக் கூட்டணியான வெற்றிமாறன் மற்றும் தனுஷ் மீண்டும் வடசென்னை 2 படத்தின் மூலம் இணைகிறார்கள். இதுதவிர இன்னும் இரண்டு பார்ட் 2 படங்கள் தனுஷின் கைவசம் இருக்கிறது. அதாவது செல்வராகவனின் புதுப்பேட்டை 2 படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

மற்றொன்று கார்த்தியை வைத்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதில் தனுஷ் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.