புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரோலக்ஸ் கௌரவத் தோற்றத்தில் நடித்து வெளிவந்த 8 படங்கள்.. த்ரிஷாவுடன் குத்தாட்டம் போட்ட சூர்யா 

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் தான் நடிகர் சூர்யா. அதிலும் தனது நடிப்பின் மூலம் பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அப்படியாக சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்து வெளிவந்த 8 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

குசேலன்: பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குசேலன். இதில் ரஜினிகாந்த் உடன் பசுபதி, பிரபு, மீனா, வடிவேலு, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சினிமா சினிமா என்னும் பாடலில் ஒரு சிறிய காட்சியில் சூர்யா தோன்றியிருப்பார்.

கடைக்குட்டி சிங்கம்: பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். இதில் கார்த்தி உடன் சாயிஷா, பிரியா பவானி சங்கர், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் கார்த்தி பங்கேற்கும் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்குபவர் ஆக சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார்.

Also Read: அதிரி புதிரியாக டைட்டிலை வெளியிட்ட சூர்யா 42 டீம்.. ட்ரெண்டாகும் வீடியோ

அவன் இவன்: பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன். இதில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர், மது ஷாலினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சூர்யா ஒரு கலை நிகழ்ச்சியில் விஷாலின் நடனத்தை பார்த்து, வியந்து பாராட்டி பேசக்கூடியவராக கௌரவ தோற்றத்தில் நடித்து இருப்பார்.

கோ: கே.வி ஆனந்த் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோ. இதில் ஜீவா, அஜ்மல், அமீர், கார்த்திகா நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அகநக நக சிரிப்புகள் அழகா என்னும் பாடலில் சிறப்பு விருந்தினராக சூர்யா தோன்றி இருப்பார்.

மன்மத அம்பு: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன் அம்பு. இதில் கமல்ஹாசன், மாதவன், த்ரிஷா, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் வரும் நிலாவ புட்டு வெச்சேன் நெத்தியில் பொட்டு வச்சேன் உன்னோட ஒட்ட வச்சேன் ஒய்யால என்னும் ஒரு பாடலில் சூர்யா த்ரிஷாவுடன் சேர்ந்து செம்மையாக குத்தாட்டம் போட்டு இருப்பார்.

Also Read: ரிலீசுக்கு முன்பே பல கோடி வியாபாரம் பார்த்த சூர்யா-42.. ஆடியோ உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்

சென்னையில் ஒரு நாள்: ஷஹீத் காதர் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சென்னையில் ஒரு நாள். இதில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், சேரன், பிரசன்னா, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.மேலும் இப்படத்தில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கும் ஒரு சிறிய காட்சியில் நடித்திருப்பார்.

நினைத்தது யாரோ: விக்ரமன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நினைத்தது யாரோ. இதில் ரெஜித் மேனன், நிமிஷா சுரேஷ், கார்த்திக், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தியிருப்பார்.

ஜூன் ஆர்: ரேவதி வர்மா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜூன் ஆர். இதில் ஜோதிகா, குஷ்பூ, சரிதா ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் கிளைமேக்ஸ் கட்சியில் ஜோதிகாவிற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பார்.

Also Read: சூர்யா மும்பையில் வீடு வாங்க இதுதான் காரணம்.. ஜோதிகாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Trending News