வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஒரே எழுத்தை டைட்டிலாக கொண்டு வெளிவந்த 8 படங்கள்.. கொடூரமாக நடித்த விக்ரம்

Single Title Movie: தமிழ் சினிமாவில் எப்படி எல்லாமோ படங்கள் வருகிறது. அதில் வித்தியாசமாக ஒரே எழுத்தில் தலைப்பு வைத்து எட்டு படங்கள் வெளிவந்து இருக்கிறது. அந்த படங்களைப் பற்றி பார்க்கலாம்.

நீ: டிஆர் ராமண்ணா இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு நீ திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் பணக்காரராக இருக்கும் ஜெய்சங்கர், அனாதையாக இருக்கும் ஜெயலலிதாவை திருமணம் செய்வார். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக கதை அமைந்திருக்கும்.

தீ: ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு தீ திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், சுமன், சௌகார் ஜானகி, ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் போராடும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த கடுமையாக உழைக்கும் தொழிற்சங்கவாதிகளின் கதையை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருக்கும்.

ஸ்ரீ: புஷ்பவாசகன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீ திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, ஸ்ருதிக்கா,காயத்ரி ஜெயராமன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது தந்தை மகனின் பாசப் போராட்டங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக அமைந்திருக்கும்.

Also read: கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

ஜி: என் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ஜி திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், திரிஷா, விஜயகுமார், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் கல்லூரியில் ஏற்படும் பிரச்சனை காரணமாக சூழ்ச்சியால் மாட்டிக் கொள்ளும் விதமாக அமைந்திருக்கும்.

: எஸ்பி ஜனதன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு ஈ திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜீவா, நயன்தாரா, ஆஷிஷ் வித்யார்த்தி, பசுபதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் மருத்துவமனையில் பணத்திற்காக டாக்டர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் விதமாக அமைந்திருக்கும்.

பூ: இயக்குனர் சசி இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு பூ திரைப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீகாந்த், பார்வதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் இரண்டு பேரின் மனசுகளில் ஏற்படும் வெவ்வேறு உணர்வுகளை மையப்படுத்தி அமைந்திருக்கும்.

Also read: முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் பெயர் பெறாத 5 பிரபலங்கள்.. விக்ரம் படத்தில் மாஸ் காட்டிய ஏஜென்ட் லாரன்ஸ்

: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு ஐ திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பாடி பில்டராக இருக்கும் விக்ரம், ஒரு சூழ்நிலையில் அவருடைய தோற்றம் சிதைக்கப்பட்ட பிறகு அவருக்கு ஏற்படும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

கோ: கே வி ஆனந்த் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு கோ திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா பாஜ்பாய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது கல்லூரியில் நண்பர்களாக இருப்பவர்கள் அவர்களுக்கு பிடித்தமான வெவ்வேறு வேலைகளை தேடிக்கொள்வார்கள். அதில் நண்பராக இருப்பவர் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று தெரிந்த பிறகு ஏற்படும் நிகழ்வுகளை வைத்து கதை அமைந்திருக்கும்.

Also read: இணையத்தில் காட்டு தீயாய் பரவும் உண்மையான தங்கலான் புகைப்படம்.. ஒரே ஒரு வெற்றிக்காக துடிக்கும் விக்ரம்

Trending News