சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இப்ப வர ஹிட் கொடுக்க போராடும் 8 ஹீரோக்கள்.. தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் வாய்ப்பில்லை ராஜா!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டும் பெரிய அளவில் ஹிட் படங்கள் எதுவும் அமைவது கிடையாது. இருந்தாலும் அந்த ஹீரோக்கள் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு ஹிட் படத்திற்காக போராடும் எட்டு ஹீரோக்களை பற்றி இங்கு காண்போம்.

மிர்ச்சி சிவா ஆர் ஜே வாக இருந்து இன்று ஹீரோவாக மாறி இருக்கும் மிர்ச்சி சிவா சென்னை 28 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் புகழைத் தேடிக் கொடுத்தது. அதை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் சமீப காலமாக இவருக்கு பெரிய அளவில் ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை. ஆனாலும் இவர் தற்போது கைவசம் சில திரைப்படங்களை வைத்துள்ளார்.

விமல் பசங்க, களவாணி போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமான விமல் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது இவர் குலசாமி, லக்கி போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் கடைசியாக இவர் நடித்த ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

ஜெய் சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஜெய் சில தோல்வி படங்களின் காரணமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் ஜெய் கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

கௌதம் கார்த்திக் கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கௌதம் கார்த்திக் இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் அவர் அப்பாவை போன்று ஒரு வெற்றி நாயகனாக இவரால் வலம் வர முடியவில்லை. இருப்பினும் தன் திறமையை நிரூபிக்கும் வகையிலான கதைக்காக இவர் காத்துக் கொண்டிருக்கிறார்.

கிருஷ்ணா கழுகு, யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் கிருஷ்ணா இப்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இவரால் இடம் பிடிக்க முடியவில்லை.

அதர்வா நடிக்க வந்த புதிதில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த இவருக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. இவர் நடிக்கும் திரைப்படங்கள் சில பிரச்சனைகளின் காரணமாக தாமதமாகி கொண்டே இருக்கிறது. ஆனாலும் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாபி சிம்ஹா ஜிகர்தண்டா திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இவருக்கு முன்னணி நாயகன் என்ற அந்தஸ்து மட்டும் கிடைக்கவில்லை. தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Trending News