அந்த காலத்தில் எல்லாம் ஹீரோயின்கள் ஹீரோவுக்கு நிகராக நடித்து அசத்தி விடுவார்கள். அதன் பிறகு வந்த காலகட்டத்தில் ஹீரோயின்கள் வெறும் பாடல் காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும்படி படங்கள் வெளிவந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல ஹீரோவுக்கு நிகராக முத்திரை பதித்த ஏராளமான ஹீரோயின்கள் இருக்கின்றனர். அவர்களில் எட்டு நாயகிகளை பற்றி இங்கு காண்போம்.
ஜோதிகா: இவர் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் ஒவர் ஆக்டிங் செய்கிறார் என்று பலராலும் கலாய்க்கப்பட்டார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் அத்தனை விமர்சனங்களையும் ஓரம் கட்டியது. அதை தொடர்ந்து மொழி, நாச்சியார், ராட்சசி, உடன்பிறப்பே போன்ற திரைப்படங்களின் மூலம் அவர் அனைவரையும் வியக்க வைத்தார். இப்போது திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் 44 வயதிலும் இவர் கெத்து காட்டி வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்: நடிக்க வந்த குறுகிய கால கட்டத்திலேயே நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று இவர் பெயர் எடுத்துவிட்டார். அந்த வகையில் இவர் கனா, கா/பெ ரணசிங்கம் போன்ற பல திரைப்படங்களில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். இப்போதும் கூட அவர் ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அபர்ணா பாலமுரளி: இவர் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரை போற்று என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதற்கு முன்பு சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவருக்கான அடையாளத்தை மட்டுமல்லாமல் தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது. அந்த வகையில் இவர் தற்போது கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடிக்க வருகிறார்.
மேகா ஆகாஷ்: தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா, பேட்ட உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு பக்க கதை திரைப்படம் இவருக்கு பாராட்டுகளைப் பெற்று கொடுத்தது. பாலாஜி தரணிதரன் இயக்கிய அந்த திரைப்படத்தில் இவர் மீரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் அவர் ஹீரோவையே ஓரம் கட்டி ஒரு சவாலான கேரக்டரில் நடித்திருப்பார்.
ரித்திகா சிங்: இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் அதை தொடர்ந்து இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். அதில் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. அதில் ரித்திகாவின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது.
Also read: தேசிய விருதுக்கு தயாராகும் ஜோதிகா.. மம்முட்டியுடன் இணையத்தை கலக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
லட்சுமி பிரியா சந்திரமௌலி: தைரியமாக பல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் லட்சுமி என்ற ஷார்ட் ஃபிலிமில் நடித்திருந்தார். சில பல சர்ச்சைகளை ஏற்படுத்திய அந்த கதை இவருக்கான அடையாளத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து இவர் நடித்த சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்தது.
லிஜோமோல் ஜோஸ்: மலையாள நடிகையான இவர் தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தில் செங்கேணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் ஒட்டு மொத்த ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கி குவித்தது குறிப்பிடத்தக்கது.
ஷ்ரத்தா ஸ்ரீநாத்: தமிழில் இவன் தந்திரன், விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் சவாலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர் மாதவனுடன் இணைந்து நடித்த மாறா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. திறமையான நடிகையாக இருக்கும் இவர் தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
Also read: இந்த நடிகையுடன் நீங்க நடிக்கக் கூடாது.. சூர்யாவை வெளுத்து வாங்கிய ஜோதிகா