Must watch Tamil web series: டிவி முன்னாடி உட்கார்ந்து பெண்கள் சீரியல் பார்ப்பது எல்லாம் தற்போது பழைய மாடல் ஆகிவிட்டது. இப்போ பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என எல்லோருமே செல்போனில் வெப் சீரிஸ் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். பெரிய பெரிய நடிகர்கள் நடிகைகள் கூட இந்த வெப் சீரிஸ் நடிக்க களம் இறங்கி விட்டார்கள்.
முன்பெல்லாம் இது போன்ற கதைகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் அதிகமாக வரும். அவற்றிற்கு போட்டி போடும் வகையில் தற்போது தமிழிலும் வெப் சீரிஸ்கள் சுவாரஸ்யமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அப்படி வெப் சீரிஸ் பார்ப்பவர்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஒன்பது கதைகளை பற்றி பார்க்கலாம்.
பார்க்க வேண்டிய 8 தமிழ் வெப் சீரிஸ்கள்
அயலி: வீரப்பனை என்னும் கிராமத்தில் 500 ஆண்டுகளாக பெண்களை ஒடுக்கி வைக்கும் நிறைய சம்பிரதாயங்கள் பின்பற்றி வருவார்கள். இந்த அடக்குமுறை எல்லாம் தாண்டி தமிழ்ச்செல்வி என்னும் பெண் டாக்டர் ஆகும் கனவை நோக்கி எப்படி நகர்கிறார் என்பது தான் கதை.
நவம்பர் ஸ்டோரி: தமன்னா நடிப்பில் வெளியான க்ரைம் கில்லர் தான் நவம்பர் ஸ்டோரி. மர்மம் நிறைந்த கொலையை கண்டுபிடிக்கும் திரைக்கதை அமைப்பு இது. 7 அத்தியாயங்களை கொண்ட இந்த சீரிஸ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
விலங்கு: திரைப்படங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விமலுக்கு விலங்கு வெப் சீரிஸ் பெரிய அளவில் கை கொடுத்தது. ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் குற்றங்களை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக விமல் இதில் நடித்திருப்பார்.
வதந்தி: இந்த வெப் சீரிஸ் கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றி நகர்கிறது. ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து விடுகிறாள். அவளை கொலை செய்தது யார், அவளை பற்றி பேசப்படும் வதந்தி உண்மைதானா என்பதை காவல்துறை விசாரணை நடத்தி கண்டுபிடிக்கிறது. 8 எபிசோடுகள் நிறைந்த இந்த வெப்சீரிஸில் அடுத்த கட்ட நகர்வு என்பது சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும். மேலும் இந்த கதைக்கு எஸ் ஜே சூர்யா தன்னுடைய சிறந்த நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார்.
தலைமை செயலகம்: முழுக்க முழுக்க அரசியல் பேசும் கதைக்களம் இந்த சீரிஸ். முதலமைச்சரின் ஊழல் மற்றும் ஒரு கொலை வழக்கை கண்டுபிடிப்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைக்கதை இது.
சுழல்: ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பார்த்திபன் முக்கியமான கேரக்டரில் நடித்த வெப் சீரிஸ் சுழல். 18 வயது நிரம்பாத ஒரு பெண் காணாமல் போவது, அதை கண்டுபிடிக்க நடத்தப்படும் விசாரணையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை இது.
செங்களம்: கலையரசன் மற்றும் நடிகை வாணி போஜன் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் வெப் சீரிஸ். முழுக்க முழுக்க பழி வாங்கும் கதை படலத்தை மையமாக கொண்டது. இந்த வெப் சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
பேட்டைக்காளி: கலையரசன் முக்கிய கேரக்டரில் நடித்த வெப் சீரிஸ் தான் பேட்டைக்காளி. ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட வெப் சீரிஸ் இது.
- குடும்பத்தோடு பார்க்க முடியாத 6 வெப் சீரிஸ்
- வெப் சீரிஸை நோக்கி படையெடுக்கும் 5 முன்னணி நடிகர்கள்
- வெப் சீரிஸில் அதிக ஆர்வம் காட்டும் பிரபலங்கள்