செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரெண்டு பொண்டாட்டி பத்தாது என காதலில் விழுந்த கார்த்திக்.. நம்பி ஏமாந்தால் தற்கொலை முயற்சியில் 80-களின் கனவுக்கன்னி

நடிகர் கார்த்திக் 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தனது முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்தார். கார்த்திக்கின் இயல்பான நடிப்பு ரசிகர்களை ஈர்த்த நிலையில் நவரச நாயகன் என்ற பட்டத்தையும் பெற்றவர்.

இதனிடையே நடிகர் கார்த்திக்கிற்கு பெண் ரசிகைகள் முதல் பெண் நடிகைகள் வரை அனைவருக்கும் விருப்பமான நடிகராக வலம் வந்தவர். இவரது திரைப்படத்தில் மோசமான கிளாமர் காட்சிகள், பெரிய அளவு ஆக்ஷன் காட்சிகள் என பெரிதாக இடம்பெறாது. மேலும் ரொமான்ஸ் காட்சிகள் கூட பார்ப்பதற்கு அழகாக இருக்கும் வகையில் கார்த்திக்கின் நடிப்பு அமைந்திருக்கும். இதனிடையே நடிகர் கார்த்திக்குடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே பல நடிகைகள் நீ, நான் என்று போட்டி போட்ட கதையெல்லாம் உண்டு.

Also Read : 20 வயசில் ஜோடி போட மறுத்த நடிகை.. 46 வயதில் கார்த்திக் உடன் இணைந்த கூட்டணி

இதன் காரணமாக நடிகர் கார்த்திக்கை ரகசியமாகவும், வெளிப்படையாகவும் காதலித்த நடிகைகளும் ஏராளம் எனலாம். நடிகர் கார்த்திக்கிற்கு இரண்டு திருமணமாகி ஒரு மகனுக்கு தந்தையான பின்பும் அவரை பிரபல நடிகை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்த செய்தி அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. 1984ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். பாஸ்கரன் இயக்கத்தில் வெளியான நினைவுகள் திரைப்படத்தில் கார்த்திக் நடித்திருப்பார்.

இத்திரைப்படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீபிரியா நடித்திருப்பார். இத்திரைப்படம் நல்ல ஒரு வெற்றியை கொடுத்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஸ்ரீபிரியாவை நடிகர் கார்த்திக் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அப்போது நடிகர் கார்த்திக்கிற்கு இரண்டு திருமணங்கள் ஆகியிருந்ததை தெரிந்துகொண்ட ஸ்ரீபிரியா, தனது காதலை மறைத்துக்கொண்டு கார்த்திக்கிடம் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.

Also Read : தீராத வலியுடன் அவதிப்படும் நவரச நாயகன் கார்த்திக்.. உடலில் ஏற்பட்ட அபாயகரமான பிரச்சனை

நாட்கள் போகப் போக, கார்த்திக் ஸ்ரீ ப்ரியாவிடம் வந்து நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன், என்றெல்லாம் அவருக்கு வாக்கு கொடுத்துள்ளார். இதை நம்பிய ஸ்ரீ பிரியா கார்த்திக்கை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். அதன்பின் கார்த்திக் கொஞ்சம் நாட்கள் கழித்து, அவர் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகவே ஸ்ரீ ப்ரியாவிடம் வந்து மன்னிப்பு கேட்டுள்ளாராம். ஆனால் இதை ஏற்காத ஸ்ரீபிரியா தற்கொலை முயற்சி செய்யும் அளவிற்கு சென்று விட்டாராம்.

அதன் பின்பு ஸ்ரீப்ரியா உன்னைவிட வேறு ஒரு சூப்பரான நடிகரை நான் காதலித்து திருமணம் செய்வேன் என கார்த்திக்கிடம் சவாலாக கூறிவிட்டு சென்றாராம். அதன் பின்பு ராஜ்குமார் சேதுபதி என்ற மலையாள நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டு, தற்போது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது கார்த்திக்கிற்காக, ஸ்ரீபிரியா தற்கொலை முயற்சி செய்யும் அளவிற்கு காதலித்த செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Also Read : திருமணத்திற்கு தனியாக வந்த புது மாப்பிள்ளை கௌதம் கார்த்திக்.. பொண்டாட்டிய மறந்துட்டு வர இப்படி ஒரு காரணமா?

Trending News