80, 90களில் மிகவும் பரபரப்பாக ஆக்சன் நடிகையாக புகழ் பெற்றவர் நடிகை ஒருவர், ஹீரோக்கள் மட்டுமே போலீஸ் உடை அணிந்து கொண்டு பறந்து பறந்து சட்டை காட்சிகளில் நடித்த காலத்தில் முதன்முதலாக போலீசாக நடித்து கலக்கினார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
அதிரடி படங்களில் நடித்ததன் மூலம் இவர் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார். அது மட்டுமல்ல இவர் இந்திய தேசிய திரைப்பட விருதை வென்றார். இவர் நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் மூலம் ஆக்சனில் இறங்கி டாப் நடிகர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் மிரட்டி விட்டார்.
அதன் பின் இவர் நடித்த ராஜாங்கம், நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால், சிவப்பு மல்லி, மன்னன் ஆகிய படங்களுக்கெல்லாம் அமோக வரவேற்பு கிடைத்து வசூலை தாறுமாறாக அள்ளி குவித்தது. இதுவரை அனைத்து மொழிகளிலும் சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் நடிகை விஜயசாந்தி.
இவர், ஒரு போட்டோகிராபரை வைத்து சாதனமாக ஒரு போட்டோ எடுத்துள்ளார். அதை அந்த போட்டோகிராபர் தனது ஸ்டூடியோவில் ஒட்டி வைத்துள்ளார். இதை பார்த்து இயக்குனர் இமயம் பாரதிராஜா வாய்ப்பு கொடுத்துள்ளார்.
ஆனால் தமிழில் நடித்தாலும் இவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து புகழ்பெற்றார். தெலுங்கில் வேகமாக வளர்ந்து நடிகையாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் பெரிய நடிகையாக இருந்தால் கூட 25 லட்சம் தான் சம்பளம் அதிகபட்சமாக வழங்கப்படக்கூடும்.
ஆனால் இவர் நடிகரை தாண்டி அப்போதே 1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளார் இதுவே அவரது சாதனை, அந்த அளவிற்கு புகழ் பெற்றிருந்தார் விஜயசாந்தி. தற்போது விஜயசாந்திக்கு 56 வயது ஆகிறது. ஆனால் திருமண வாழ்க்கையில் அவருக்கு குழந்தை இல்லை.
Also Read: வில்லியாக ரஜினியை உரசிப் பார்த்த 5 நடிகைகள்.. சண்டி ராணியாக சீறிய விஜயசாந்தி