திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த 8 வேறு மாநில நடிகர்கள்.. உயர பறந்த எம்ஜிஆரின் கொடி

வணக்கம் சினிமா பேட்டை வலைத்தள வாசகர்களே. இந்த வலைத்தளத்தில் தொடர்ந்து தமிழ் சினிமா பற்றிய கட்டுரைகளை நாம் கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க விருக்கும் தலைப்பு தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் 8 வேற்று மொழி நடிகர்கள். பல பேர் இதில் இருக்கும் சிலரை வேற்று மொழிக்காரர்கள் என்று கூட தெரியாமல் ரசித்திருக்கலாம். அதனால் தவறேதுமில்லை.

8. விஷால்: தமிழ் சினிமாவில் அதிகம் ஆக்ஷன் மற்றும் மதுரை சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் விஷால். பார்க்க அச்சு அசல் மதுரைக்காரர் போலவே தோன்றும் இவர் உண்மையில் தெலுங்கை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை ஜிகே ரெட்டி நன்கு அறியப்பட்ட பட தயாரிப்பாளர். மேலும் நடிகை ஸ்ரேயா ரெட்டி இவரது அண்ணி என்பது கூடுதல் தகவல்.

7. ஜெயம் ரவி: தமிழில் இன்னொரு மிகப் பிரபலமான நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான காரணத்தால் இவரும் இவருடைய அண்ணன் மோகன் ராஜா இருவரும் ஜெயம் அடைமொழி கொண்டு அழைக்கப்படுவார்கள். இவரது தந்தை எடிட்டர் மோகன் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த தமிழர் தான் என்றாலும் அவருடைய அம்மா ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கர். ஜெயம் ரவியும் குழந்தை நட்சத்திரமாக முதல் முதலில் அறிமுகமானதும் தெலுங்கு சினிமாவில் தான்.

6. அர்ஜுன்: ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் தமிழர் இல்லை என்று சொன்னால் சிலருக்கு வியப்பாக கூட இருக்கலாம். ஆம் உண்மைதான். அர்ஜுன் சார்ஜா என்று முழு பெயர் கொண்ட நடிகர் அர்ஜுன் அவர்கள் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர். தமிழில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தமிழ் சினிமாவிலேயே அவர் செட்டிலாகிவிட்டார். அவருக்கு இரண்டு மகள்கள் உண்டு மேலும் நாட்டுப்பற்று மிக்க கதைகளில் நடித்து மிகப் புகழ்பெற்றவர் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.

5. பிரகாஷ் ராஜ்: தமிழில் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் பிரகாஷ்ராஜ். வில்லன், கதாநாயகன், காமெடியன், கௌரவ தோற்றம் என்ற பல வகையில் நமக்கு அறியப்பட்ட சிறந்த நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் டிஸ்கோ சாந்தியின் தங்கையை காதலித்து திருமணம் செய்து தற்போது விவாகரத்தும் பெற்று விட்டார். இன்னொரு திருமணமும் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருபவர் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர் ஆவார்.

4. முரளி: தனது இறுதிக்காலம் வரை கல்லூரி மாணவர் ஆகவே நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் முரளி. அதர்வாவின் அப்பாவான இவர் தமிழர் இல்லை என்று சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும் அந்த அளவுக்கு அவர் தமிழர் தோற்றத்தையே கொண்டிருந்தது. கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட இவர் ஆரம்பத்தில் சில கன்னட திரைப்படங்களிலும் பின்னர் தமிழ்த் திரைப்படங்களிலும் அறிமுகமாகி தமிழ் சினிமாவிலேயே நிலைபெற்று விட்டார். 50 வயதிலேயே அதிக குடியால் இறந்தும் போய்விட்டார்.

3. அஜித் குமார்: தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார். தமிழ் சினிமாவில் இன்று முக்கியமான ஒரு நடிகர் இவர். இவர் தமிழர் அல்ல என்பது மக்களுக்கு நன்கு தெரிந்திருந்தாலும் இவர் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளனர். இவரது தந்தை பாலக்காட்டைச் சேர்ந்த மலையாளி, தாய் கொல்கத்தாவை சேர்ந்த சிந்தி. இவர் உடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

2. ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த லிஸ்டில் தவறாமல் இடம் பிடிப்பார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை மிகப் பெரும் போராட்டத்திற்கு பிறகு பிடித்தார். இன்றுவரை தயாரிப்பாளர்களின் வசூல் சக்கரவர்த்தியாக விளங்கி கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல

1. எம்ஜியார்: ரஜினியையும் தாண்டி ஒரு மனிதர் தமிழ் சினிமாவில் உள்ளார் என்றால் அது புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் தான். இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்த மலையாளி தான் எம்ஜியார். ஆரம்பத்தில் குடும்ப கஷ்டத்துக்காக அண்ணனுடன் நடிக்க ஆரமித்தவர் பின்னாளில் தமிழ் நாட்டின் முதல்வராக ஆனது வரலாறு. தோல்வி காணாமல் முதல்வராகவே இறந்தும் போனார்.

இவர்கள் அனைவரும் தமிழர்களாக இல்லாத போதும் தமிழ் மொழி மீதும் தமிழ் நாட்டு மக்கள் மீதும் அதிக அன்பு கொண்டவர்கள். தமிழ் நாட்டுக்கு தேவைப்படும் போதெல்லாம் உதவும் மனப்பாங்கு கொண்டவர்கள். இவர்களை போல ராதாரவி, ராதிகா, ஜெயராம், போன்றோரும் வேற்று மொழிக்காரர்கள் தான் என்பது கூடுதல் தகவல்.

- Advertisement -

Trending News