ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

எம்ஜிஆர் முதல் விஜய் வரை அரசியலுக்குள் நுழைந்த 9 பிரபலங்கள்.. வெற்றி தோல்விக்கு இதுதான் காரணம்

9 celebrities who entered politics: என்னதான் சினிமாவிற்குள் நுழைந்து பணம், பேர், புகழ் என அனைத்தையும் பெற்றாலும் பதவி ஆசையும் அவர்களை சும்மா விடுவதில்லை. அதனால் சில பிரபலங்கள் சினிமாவை ஒரு அடித்தளமாக வைத்துக்கொண்டு அதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான பின் அரசியலுக்குள் நுழைந்து விடுகிறார்கள். அப்படி நுழைந்த பிரபலங்களுக்கு கிடைத்த வெற்றி தோல்விகளை பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

எம்ஜிஆர்: சினிமா மூலம் மக்களிடம் நல்ல பெயரை பெற்று முதன் முதலில் அரசியலுக்குள் நுழைந்தவர். சும்மா பதவி ஆசைக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ண வேண்டும் என்று உண்மையாகவே நினைத்த ஒரு புரட்சித்தலைவர். அதனால்தான் இவருக்கு வெற்றி கிடைத்தது என்றே சொல்லலாம். இவர் காங்கிரஸ் கட்சியில் முதலாவதாக இணைந்தார்.

பின்னர் பேரறிஞர் அண்ணாவை அரசியல் குருவாக நினைத்து திமுகவில் நுழைந்தார். ஆனால் அங்கே கலைஞர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனியாக பிரிந்து சென்று 1972 ஆம் ஆண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(ADMK) எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய முதல் தேர்தலையே ஆட்சியைப் பிடித்து உயிர் பிரியும் வரை தமிழக முதல்வராகவே வாழ்ந்து காட்டினார்.

சட்டமன்றத் தேர்தலின் வெற்றியை கைப்பற்ற போராடும் விஜய்

சிவாஜி: எம்ஜிஆர் உடன் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் சரிக்கு சமமாக நின்னு வெற்றி பெற நினைத்தார். ஆனால் சினிமாவில் கை கொடுத்த அளவுக்கு அரசியலில் இவரால் பயணிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் திராவிட கழகத்தில் இணைந்தார். அடுத்ததாக பேரறிஞர் அண்ணா, திமுகவை தொடங்கிய போது 1949 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார்.

அங்கு ஏற்பட்ட சில சர்ச்சையான விஷயங்களால் காங்கிரஸ் சார்பாக ராஜ்யசபா எம்பி ஆகவும் இருந்தார். அடுத்ததாக எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா கூட்டணியில் காங்கிரஸ் இணைந்ததால் அதிருப்தி அடைந்த சிவாஜி, தமிழகம் முன்னேற்ற என்ற தனி அரசியல் கட்சியை 1988 ஆம் ஆண்டு தொடங்கினர். ஆனால் அதில் கிடைத்த தோல்வியால் 1993 ஆம் ஆண்டுடன் அரசியல் வாழ்க்கைக்கு நிறைவு கொடுத்து விட்டார்.

பாக்யராஜ்: எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருக்கும் பாக்கியராஜ், எம்ஜிஆர் பெயரால் 1989 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி அரசியல் கட்சியை தொடங்கினார். ஆனால் இவர் ஆரம்பித்த கட்சி மக்களிடம் அந்த அளவுக்கு எடுபடாமல் போனதால் ஓரிரு ஆண்டுகளிலேயே கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமா பக்கம் போய்விட்டார்.

டி ராஜேந்தர்: இவர் 1991 ஆம் ஆண்டு தாயாக மறுமலர்ச்சி கழகம் என்ற பெயரில் தனி கட்சியை ஆரம்பித்தார். ஆனால் இதை சரிவர செய்ய முடியாததால் கட்சியை கலைத்துவிட்டு திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் அதன் பின் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். ஆனால் தற்போது வரை எந்த ஒரு வெற்றியும் பெறாததால் இப்பொழுது வரை வெறும் பெயரளவில் மட்டும் தான் இந்த கட்சி செயல்பட்டு வருகிறது.

விஜயகாந்த்: கடந்த ஆண்டு டிசம்பரில் மறைந்த விஜயகாந்த், எம்ஜிஆர்க்கு பிறகு மக்களிடம் நல்ல பெயரை சம்பாதித்த ஒரே தலைவர் விஜயகாந்த் ஆகத்தான் இருக்க முடியும். இவர் 2005 ஆம் ஆண்டு மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினர். கட்சி தொடங்கிய வேகத்தில் வேகமாக முன்னேற்றம் அடைந்து வந்த இவர் முதல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக ஆனார். இதனைத் தொடர்ந்து அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து அதிக தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டார். ஆனால் உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கி போய்விட்டார். எம்ஜிஆர் பிறகு அரசியலில் ஓரளவு உச்சம் தொட்டிருக்கிறார்.

சரத்குமார்: என்னதான் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் அரசியலில் ஏதாவது ஒரு பதவியை பெற்று விட வேண்டும் என்று அவ்வப்போது ஒவ்வொரு கட்சியாக தாவிக்கொண்டே இருக்கிறார். அந்த வகையில் திமுக அதிமுக கட்சியில் இருந்த இவர் 2007 ஆம் ஆண்டு மதுரையில் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். ஆனால் அதிலும் தொடர்ந்து பயணிக்க முடியாமல் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணி வைத்துவிட்டார்.

கருணாஸ்: சினிமா மூலம் நகைச்சுவை நடிகராக நுழைந்த கருணாஸ் அரசியலில் முக்குலத்தோர் சமூக ஆதரவுடன் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை தொடங்கினார். அதன் பின் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இவருடைய அமைப்பை, கட்சியாக மாற்றி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். ஆனால் இவருடைய தனி கட்சி பெயர் சொல்ல முடியாமல் அப்படியே முடங்கி போய்விட்டது.

கமல்ஹாசன்: சினிமாவில் உலக நாயகனாக வலம் வந்த இவர், அரசியல் ஆசையால் 2018 ஆம் ஆண்டு மதுரையில் மக்கள் நீதி மையம் எனும் கட்சியை தொடங்கினார். ஆனால் நின்ன தேர்தலில் அதிகபட்சமாக ஓட்டு வாங்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனால் வெற்றி பெற முடியாத விரக்தியில் தற்போது காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார்.

விஜய்: இதுவரை சினிமாவிலிருந்து அரசியலுக்குள் நுழைந்த பல பிரபலங்கள் வெற்றி தோல்விகளை சந்தித்த நிலையில் தொடர்ந்து அரசியலில் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது. தற்போது இவர்கள் எல்லாம் தாண்டி அரசியலில் நமக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தமிழக வெற்றி கழகத்தின் மூலம் அடி எடுத்து வைத்திருக்கிறார். எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் போலவே இவருக்கும் மக்களிடத்தில் நல்ல பெயர் இருப்பதால் வெற்றி கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறார். அந்த வகையில் வரப்போற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற பயணித்து வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News