விவசாயத்தில் முதலீடு செய்த 9 பிரபலங்கள்.. அமெரிக்காவையும் விட்டு வைக்காத நெப்போலியன்

Napoleon : உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார் என்பதற்கு ஏற்ப விவசாயம் நம் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது. விவசாயம் செய்து அதில் இருந்த வருமானத்தை பார்ப்பது என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

அதன் மூலம் நல்ல உணவுகளை நாம் சாப்பிடுகிறோம் என்பதே பெரிய விஷயம் தான். அவ்வாறு விவசாயம் செய்யும் பத்து பிரபலங்களை பார்க்கலாம்.

நடிப்பு, அரசியல் என இரண்டிலும் பங்களித்து வருபவர் தான் கருணாஸ். இவர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் விவசாயம் செய்து வருகிறார்.

நெப்போலியன் அமெரிக்காவில் இப்போது ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அங்கேயும் 300 ஏக்கரில் இப்போது நெப்போலியன் விவசாயம் செய்து வருகிறார்.

ஹரிதாஸ் படத்தில் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் நடிகர் கிஷோர். இவர் ஒரு காட்டையே விலைக்கு வாங்கி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு விவசாயம், பண்ணை போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.

விவசாயம் செய்யும் 9 சினிமா பிரபலங்கள்

விஜய்யின் ஜனநாயகன் படத்தை இயக்கும் ஹெச் வினோத்தும் விவசாயத்தில் அதிக ஆர்வம் உடையவர். பல இடங்களில் விவசாயம் செய்யும் இவர், இதன் முக்கியத்துவத்தையும் தொடர்ந்து பேசி வருகிறார்.

மாதவன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தோட்ட வளர்ப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தனது வீட்டின் அருகில் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

பன்முகத்தன்மை கொண்ட பிரகாஷ்ராஜ் நடிப்பு அரக்கர் என்ற சொல்லலாம். அதேபோல் கர்நாடகாவில் பிரகாஷ்ராஜ் சொந்தமாக விவசாயம் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் பார்த்து வருகிறார்.

நடிகர் கார்த்தி இப்போது சர்தார் 2, கைதி 2 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் உழவர் என்ற அறக்கட்டளையே நடத்தி வருகிறார். விவசாயத்தை மேம்படுத்த பல முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளார்.

நகைச்சுவை நடிகரான சூரி கிராமத்திலிருந்து வந்தவர் தான். அதனால் சிறுவயதில் இருந்தே அவருக்கு விவசாயம் மீது ஈடுபாடு இருந்துள்ளது. சினிமாவுக்கு வந்த பிறகும் விவசாயமும் செய்து வருகிறார். அதோடு வீட்டில் காளையும் வளர்த்து வருகிறார்.

பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா வீட்டின் மொட்டை மாடியில் விவசாயம் செய்து வருகிறார். இப்போது தனியாக இடம் வாங்கி அதிலும் பல மரங்கள் வளர்த்து வருகிறார்

Leave a Comment