செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ரிலீசுக்கு பின்பு ட்ரிம் செய்யப்பட்ட 9 படங்கள்.. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி புஸ்ஸுன்னு போன கோப்ரா

படத்தின் வெற்றிக்காக படக்குழு பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவதுண்டு. அப்படித்தான் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான 9 படத்தை ரிலீசுக்கு பின்பு ட்ரீம் செய்து வெற்றிக்கு வழி வகுத்துள்ளனர். அதிலும் சில தினங்களுக்கு முன்பு வெளியான விக்ரமின் கோப்ரா படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற விட்டு, கடைசியில் புஸ்ஸுன்னு ஆனது.

ஆயிரத்தில் ஒருவன்: செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், கிபி 1279 ஆம் ஆண்டு காலகட்டத்தின் கதை தொடர்ச்சி. ஆகையால் சோழ, பாண்டிய வரலாற்றுப் பின்னணியை கொண்ட இந்தப் படத்திற்காக முன்தயாரிப்பிற்கான வேலைகள் அனைத்தும் பார்த்து பார்த்து செய்யப்பட்டு, ரிலீசுக்கு பிறகும் படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் மாற்றியமைத்தனர். இதனால் இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகவன் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.

ஜில்லா: 2014 ஆம் ஆண்டு மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து தைப்பொங்கல் அன்று வெளிவந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இருப்பினும் படத்தில் ஏகப்பட்ட மாற்றத்தை செய்து, ரிலீசுக்கு பின்பு என்னதான் படக்குழு பல்வேறு வித்தைகளை கையாண்டாலும் இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படமாகவே ஆனது.

Also Read: கோப்ரா பட தோல்வியை அன்றே கணித்த விஜய்.. பாம்பு ரொம்ப நேரம் படம் எடுத்தா கீறி கிட்ட தோத்து போகும்

அஞ்சான்: 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அதிரடித் திரைப்படமான இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருப்பார். 55 பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை ஏகப்பட்ட மாற்றங்களை ரிலீசுக்கு பின்பு செய்தனர். அதன் விளைவாக பாக்ஸ் ஆபிஸில் 115 கோடியை அஞ்சான் குவித்தது.

24: 2016 ஆம் ஆண்டு சூர்யா தனது சொந்த தயாரிப்பில் மூன்று வேடங்களில் நடித்த இந்த படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 2015 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு மிகப்பெரிய ஏற்பாட்டில் துவங்கப்பட்டு மும்பை உள்ளிட்ட இடங்களிலும், போலந்து போன்ற வெளிநாடுகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டு, படத்தின் வெற்றிக்காகவே ரிலீசுக்கு பின்பு கூடுதலாக படத்தின் காட்சிகளை மாற்றி அமைத்தனர்.

இமைக்கா நொடிகள்: 2018 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து எழுதி இயக்கிய அதிரடி கதை கொண்ட திரைப்படமான இந்தப் படத்தில் நயன்தாரா தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவருடன் அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கன்னா ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2017ல் நிறைவடைந்தது. ஆனால் ஒரு வருடம் கழித்தே ரிலீசான இந்தப் படத்தில் ரிலீசுக்கு பின்பு ஏகப்பட்ட காட்சிகள் ட்ரீம் செய்யப்பட்டது. இதனால் படம் விறுவிறுப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விதமாக இருந்தது.

Also Read: நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி கோப்ரா செய்த முதல் நாள் வசூல்.. இத்தனை கோடியா?

வடசென்னை: 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சுமார் ஆறு வருடங்களாக நடைபெற்றது. இதில் வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையை பற்றிய கதையை காண்பித்ததால், வடசென்னையை பற்றி தவறாக சித்தரிப்பதாக கூறி பல அமைப்புகளிடமிருந்து இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் எழுந்தது.

இதனால் படத்தின் கதையை மாற்றாமல் அதில் இருக்கும் சாட்சிகளை மட்டும் ரிலீசுக்கு பின்பு மாற்றியமைத்தனர். முதல் பாகத்திற்கு எழுந்த அதே எதிர்ப்புதான் தற்போது இரண்டாம் பாகத்தையும் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

வலிமை: வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் அதிரடி படமாக வெளியான வலிமை திரைப்படம் ரிலீசுக்கு முன்பு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்தது. இந்தப்படமும் தயாரான பிறகு ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியானது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.

யானை: அருண் விஜய்-ஹரி கூட்டணியில் இந்த வருடம் ஜூலை மாதம் வெளியான யானை திரைப்படம் உருவான பிறகும், ட்ரீம் செய்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ரிலீஸானது. இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஹரி இயக்கத்தில் ஏற்கனவே வெளியான வேல், ஆறு, சிங்கம் வேங்கை, சாமி போன்ற படங்களின் நல்ல நல்ல காட்சிகளின் தொகுப்பாகவே யானை தெரிந்தது.

Also Read: 5 நாளில் 100 கோடிக்கு பிளான் போட்ட விக்ரம்.. சீயானுக்கு இடியாய் விழுந்த அடி

கோப்ரா: இரண்டு நாட்களுக்கு முன்பு சியான் விக்ரம் பத்து வேடங்களில் நடித்து வெளியான கோப்ரா படத்திற்காக அவருடைய ரசிகர்கள் சுமார் மூன்று வருடங்களாக காத்திருந்தனர். இந்த படத்தை ரிலீசுக்கு பின்பு, ட்ரிம் செய்து படக்குழு வெளியிட்டாலும், அவர்களை நினைத்த வரவேற்பு கோப்ரா படத்திற்கு கிடைக்காமல் தற்போது திரையரங்கில் படுதோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஒரு படத்தை எப்படியாவது ஹிட்டாக்க வேண்டும் என்பதற்காக அந்தப் படத்தை பட்டி பார்த்து, ட்ரிம் செய்தாவது ஓடவைக்க படக்குழு முயற்சி செய்தாலும், அதிலும் சில படங்களுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைப்பதில்லை. அதிலும் கோப்ராவின் நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளது.

Trending News